17.06.2021 அரசு முறை பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இன்று மாலை (ஜூன் 17) பிரதமர் மோடியை சந்தித்து 25 தலைப்புகளீல் 62 பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம் ஒரு மெகா கோரிக்கை பட்டியலை கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி மாறியது. முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் 3 நாள் அரசுமுறை பயணமாக இன்று காலை சிறப்பு விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் அமைச்சர் துரைமுருகன், தனிச் செயலாளர்கள் உள்ளிட்டோர் சென்றனர்.
டெல்லியில் கட்டப்பட்டுவரும் திமுக அலுவலகத்தைப் பார்வையிட்ட மு.க.ஸ்டாலின் பின்னர், தமிழ்நாடு இல்லத்துக்கு சென்று அங்கே காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். பின்னர், மாலையில் பிரதமர் மோடியை சென்று சந்தித்து 25 தலைப்புகளீல் 62 பிரச்னைகள் குறித்து ஒரு மெகா கோரிக்கை பட்டியலை கொடுத்துள்ளார்.
மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் அளித்துள்ள கோரிக்கை பட்டியலில் கூறியிருப்பதாவது:
நீர் ஆதாரங்கள் பிரச்னைகள்
அ) கர்நாடகாவின் மேகேதாட்டு திட்டம் தொடர்பாக..
ஆ) முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடி உயர்த்துவது தொடர்பாக…
இ) நதிகள் இணைப்பது தொடர்பாக… (கோதாவரி – காவேரி இணைப்பு மற்றும் காவேரி குண்டாறு இணைப்பு தொடர்பாக)
மீன் வளத்துறை
அ) இந்தியர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பாக் விரிகுடாவில் உள்ள மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்
ஆ) கச்சத்தீவை மீட்டெடுப்பது மற்றும் தமிழ்நாடு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்பது தொடர்பாக…
இ) மீனவர்களின் நலனுக்காக தேசிய ஆணையத்தை நிறுவுதல்…
மின்சக்தி
அ) நிலக்கரி விநியோகத்தில் உள்ள இடையூறுகளை நீக்குதல்.
ஆ) சிறப்பு நிதி திட்டத்தின் கீழ் விரைவாக நிதி வெளியீடு
பணப்புழக்க திட்டம் டிரான்ச் II விதிமுறைகள் தாராளமயமாக்கப்பட வேண்டும்.
இ) மின்சார திருத்த மசோதா 2020-ஐ ரத்துசெய்
நிதி
அ) செஸ் மற்றும் கூடுதல் கட்டணத்தின் வருவாயை மாநிலங்களுடன் பகிர்வது தொடர்பாக…
ஆ) மாநில நிதிகளில் 15வது நிதி கட்டுப்பாட்டின் தாக்கம்
இ) நிலுவையில் உள்ள 14 வது நிதி ஆணையத்தின் மாணியத்தை விடுவிக்க வேண்டும்.
ஈ) நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மற்றும் நிலுவையில் உள்ள நிலுவைத் தொகை
ஒன்றிய அரசுக்கும் மாநிலத்திற்கும் இடையில் பகிரப்பட்ட திட்டங்களுக்கான நிலுவைத் தொகையை விடுவிக்க வேண்டும்.
சுகாதாரத் துறை
அ) தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (நீட் தேர்வு) – இது போன்ற மருத்துவ நுழைவுத் தேர்வை மற்ற படிப்புகளுக்கு நீட்டிக்க முயற்சிப்படை கைவிட வேண்டும்.
ஆ) தமிழ்நாட்டில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
இ) கோவையில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனையை நிறுவ வேண்டும்.
ஈ) தடுப்பூசி போதுமான அளவு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
உ) உயிர்காக்கும் மருந்துகள் போதிய அளவு வழங்குவது தொடர்பாக…
ஊ) யுஜி மற்றும் பிஜி அளவில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைக்கான அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி இட ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
வேளாண்மை
அ) பிரதமரின் FasalBimaYojana (PMFBY)
ஆ) 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்.
தொழில்துறை
அ) செங்கல்பட்டு மற்றும் குன்னூர் பாஸ்டர் நிருவனத்தில் எச்.எல்.எல் பயோடெக்கில் தடுப்பூசி உற்பத்தியைத் தொடங்க வேண்டும்…
ஆ) மெகா ஜவுளி பூங்காக்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
இ) சேலம் எஃகு ஆலையில் உள்ள கூடுதல் நிலம் பாதுகாப்பு தொழில்துறை பூங்காவிற்கு வழங்கப்பட வேண்டும்.
பள்ளிக் கல்வி
(அ) தேசிய கல்வி கொள்கை ரத்து செய்யப்பட வேண்டும்.
(ஆ) சர்வஷிக்ஷா அபியன், ராஷ்டிரிய மத்யமிக் ஷிக்க்ஷா அபியான் மற்றும்
மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ் மாணியங்களை விடுவிக்க வேண்டும்.
(இ) இலவச கட்டாய கல்வி சட்டத்தை குழந்தைகளின் உரிமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சினை
ஈழத் தமிழர்களுக்கு சமமான சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் வேண்டும்
தமிழ்
அ) தமிழ்மொழியை இந்தியாவின் அதிகாரப்பூர்வ அலுவலக மொழியாக அறிவிக்க வேண்டும்.
உயர்நீதிமன்றத்தில் தமிழ்மொழி பயன்படுத்தப்பட வேண்டும்.
ஆ) தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் அலுவலகங்கள் மற்றும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் பணி நியமனங்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
இ) சென்னையில் உள்ள செம்மொழி தமிழாய்வு நிறுவனத்துக்கு புத்துயிர் அளிக்க வேண்டும்.
ஈ)திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்க வேண்டும்.
என்பன உள்பட 25 தலைப்புகளீல் 62 பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடியிடம் ஒரு மெகா கோரிக்கை பட்டியலை கொடுத்துள்ளார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/cm-mk-stalin-meets-pm-modi-and-gives-mega-demand-list-to-modi-314866/