சனி, 19 ஜூன், 2021

அமைதியான நாடுகள் பட்டியல்: இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?

 

சிட்னியின் பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம் (ஐஇபி), உலகின் அமைதியான நாடுகளின் வரிசைப் பட்டியலைக் ஜூன் 18ஆம் தேதியன்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 163 நாடுகள் உள்ள இந்த பட்டியலில், இந்தியா 135வது இடத்தில் உள்ளது.

தெற்காசியாவின் 7 நாடுகளில் 5வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. கடந்த 2020 ஆண்டின் அமைதியான நாடுகளின் பட்டியலில் 139வது இடத்தை பிடித்திருந்த இந்தியா இம்முறை 4 புள்ளிகள் முன்னேறி 135வது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மோதல்களை களையெடுப்பதில் 21 நாடுகள் முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது. இதில் மிகப்பெரிய முன்னேற்றங்கள் இந்தியா மற்றும் உக்ரைன் போன்ற நாடுகளில் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பெருந்தொற்றுக்கு மத்தியிலும், உலக நாடுகளில் உள்ள சிறுபான்மையினர் வெறுப்பரசியலுக்குப் பெரிதும் ஆளாகின்றனர் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, இந்தியாவிலும் இலங்கையிலும் இஸ்லாமியர்கள் கொரோனா தொடர்பான ஒடுக்குமுறைக்கு உள்ளாவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டை விட தற்போது 112 நாடுகள் தங்கள் ராணுவ கட்டமைப்பை அதிகரித்துள்ளன. இதில் அமெரிக்கா, சீனாவோடு இந்தியாவும் அடக்கம்.

மேலும், உலகின் அமைதியான நாடுகளின் வரிசைப் பட்டியலின் முதல் 5 இடங்களில் ஐஸ்லாந்து முதல் இடத்திலும், நியூசிலாந்து, டென்மார்க், போர்ச்சுக்கல், ஸ்லோவேனியா ஆகிய நாடுகள் இதர இடங்களையும் பெற்றுள்ளன. ஈராக், தெற்கு சூடான், சிரியா, ஏமன்,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் கடைசி இடங்களைப் பெற்றுள்ளன.

source https://news7tamil.live/global-peace-index-2021-india.html