Krishn Kaushik
Disengagement of troops: China suggests Major Gen-level talks : இந்திய சீன எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாங்கோங் சோவில் நிறுத்தப்பட்ட இரண்டு நாட்டு துருப்புகளும் நான்கு மாதங்களுக்கு முன்பு அப்பகுதியில் இருந்து விலகிக் கொண்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு கிழக்கு லடாக்கின் பல்வேறு பகுதியில் துருப்புகளை நீக்க நடத்தப்பட்ட கார்பஸ் தளபதிகள் மட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில், சீனா, டிவிசன் கமாண்டர்கள் மட்ட பேச்சுவார்த்தை நடத்த பரிந்துரை செய்துள்ளது. இந்தியா இது குறித்து சிந்திப்பதாக கூறியுள்ளது.
டிவிஷன் கமாண்டர் மட்ட பேச்சுவார்த்தைகளில், மேஜர் ஜெனரல் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தலைமை வகிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கார்ப்ஸ் கமெண்டர்கள் மட்டத்தில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. ஏன் என்றால் இதில் உயர் அதிகாரிகளாக கார்ப்ஸ் அல்லது அதற்கு இணையான குழுக்களுக்கு தலைமை தாங்கும் லெப்டினன்ட் ஜெனரல்கள் இருக்கின்றனர். துருப்புகளை நீக்கும் செயல்முறையில் சில பிரச்சனைகள் இருக்கின்ற இந்த நேரத்தில் சீனாவின் பரிந்துரை வந்துள்ளது. ஏப்ரல் 9ம் தேதி நடைபெற்ற கார்ப்ஸ் கமாண்டர் அளவிலான பேச்சுவார்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
பாதுகாப்பு படைப்பிரிவில் உள்ள அதிகாரி ஒருவர், ஹாட் ஸ்பிரிங் மற்றும் கோக்ரா பகுதிகளில் உள்ள துருப்புகளை நீக்குவது தொடர்பாக இந்தியாவுடன் சீனா பேச இருப்பதாக கூறினார். இந்த இரண்டு பகுதிகளிலும் சீனாவின் சிறிய ராணுவ குழுக்கள், இந்திய எல்லைப்பிரிவின் உள்ளே முகாமிட்டுள்ளனர்.டிவிஷன் கமாண்டர்கள் இந்த பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம். இந்தியா தற்போது அடுத்த கட்ட ஆலோசனை தொடர்பாக சிந்தித்து வருகிறது. பல்வேறு முறைகளில் சீனா இந்தியாவுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது என்று அவர் கூறினார்.
கார்ப்ஸ் கமாண்டர்கள் அளவிலான பேச்சுவார்த்தைகள் எதிர்காலத்தில் நடைபெறாது என்று அவர் கூறவில்லை. ஆனால் டிவிஷன் கமாண்டர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகள் தான் முடிவுகளை எட்டும். பிறகு மூத்த அதிகாரிகள் மீண்டும் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட வேண்டாம். பாங்கோங் சோ பகுதியில் இருந்து இரண்டு தரப்பு வீரர்களும் தங்களின் நிலையை விலக்கி கொண்ட பிறகு இரு தரப்பு பேச்சுவார்த்தைகளிலும் எந்த விதமான வளர்ச்சியும் ஏற்படவில்லை. மற்ற பகுதிகளில் இருக்கும் சீன ராணுவத்தினரை அங்கிருந்து விலக்கி கொள்ள அந்நாடு மறுத்துவிட்டது.
இந்த கமாண்டர்கள் மட்ட பேச்சுவார்த்தையில் இந்திய துருப்புகளை சீன படைகள் அனுமதிக்க மறுக்கும் தெப்சங் சமவெளி போன்ற இடங்கள் குறித்து இடம் பெறுமா என்பதை அவர் கூறவில்லை. இந்தியாவின் முதன்மை ரோந்து புள்ளிகளான Patrolling Point 10, PP11, PP11A, PP12 and PP13 பகுதிகளுக்கு இந்திய துருப்புகளை ரோந்து பணி மேற்கொள்ள சீன ராணுவம் அனுமதிக்கவில்லை.
இந்த பேச்சுவார்த்தைக்கு காலம் எடுக்கும். 1986ம் ஆண்இல் தவாங் அருகே சும்த்ரோங் சு பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைகளில் சுமூக தீர்வு காண 8 வருடங்கள் ஆனது என்று ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவனே தெரிவித்தார்.
லடாக் எல்லை பிரச்சனை மே 2020ல் துவங்கிய பிறகு இரு தரப்பு கார்ப்ஸ் கமாண்டர்கள் மட்ட பேச்சுவார்த்தை 11 முறை நடைபெற்றுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் இந்தியா மற்றும் சீனப் படைகள் கைஷால் மலைப் பகுதிகள் மற்றும் பாங்கான் சோ பகுதிகளின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டது. பிப்ரவரி 20ம் தேதி அன்று கூட்டம் நடைபெற்ற பிறகு, மற்ற பகுதிகளில் இருந்து துருப்புகளை நீக்குவது தொடர்பாக உடன்பாடு எட்டப்படவில்லை.
அவர்கள் மீண்டும் ஏப்ரல் 9ம் தேதி அன்று ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால் முதலில் நடைபெற்ற கூட்டங்கள் போல் அது அமையவில்லை. எதிர்கால திட்டங்கள் குறித்து போதுமான தெளிவு அற்றதை குறிக்கும் வகையில் கூட்டறிக்கை கூட இவ்விரு தரப்பினரும் அப்போது வெளியிடவில்லை.
தற்போதுள்ள ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளுக்கு ஏற்ப நிலுவையில் உள்ள சிக்கல்களை விரைவாக தீர்க்க வேண்டியதன் அவசியத்தை ஒப்புக் கொண்டோம் என்று ஏப்ரல் 10ம் தேதி அன்று இந்திய ராணுவம் செய்தி அறிக்கை வெளியிட்டது. மற்ற பகுதிகளில் படைகளை நீக்கம் செய்வது மூலம் அமைதியை முழுமையாக மீட்டெடுப்பதை உறுதி செய்வதற்கும் இருதரப்பு உறவுகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என்று அதில் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது
source https://tamil.indianexpress.com/india/disengagement-of-troops-china-suggests-major-gen-level-talks-314001/