வெள்ளி, 18 ஜூன், 2021

சென்னை முதல் கன்னியாகுமரி தொழிலியல் வழித்தடம் : 484 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தம் கையெழுத்து

 தமிழகத்தில் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தவும், தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி தொழிலியல் வழித்தட சாலை இணைப்பைத் தரம் உயர்த்தவும் ஆசிய வளர்ச்சி வங்கி, 484 மில்லியன் டாலர் மதிப்பிலான கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்திய அரசின் சார்பாக பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் ரஞ்சித் குமார் மிஸ்ராவும், ஆசிய வளர்ச்சி வங்கியின் சார்பாக அதன் இந்திய இயக்குநர் டேகியோ கொனிஷியும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்கு ஆசியாவின் உற்பத்தியோடு இந்தியாவை இந்தியாவை இணைக்கும், கிழக்குக் கடற்கரை பொருளாதார மண்டலத்தின் ஒரு பகுதியாக மேற்குவங்கம் முதல் தமிழகம் வரையும், தமிழகத்தில் சென்னை கன்னியாகுமரி தொழிலியல் வழித்தடத்தை மேம்படுத்தவும் மற்றும் கிழக்குக் கடற்கரை பொருளாதார மண்டலத்தை மேம்படுத்தும் பணிகளில் இந்திய அரசின் முன்னணி நட்புநவாக ஆசிய வளர்ச்சி வங்கி, செயல்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம், தமிழகத்தில் சென்னை முதல் கன்னியாகுமரி இடையே உள்ள 23 மாவட்டங்களில் சுமார் 590 கிலோமீட்டர் வரையிலான மாநில நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்தவும். இதன் மூலம் தொழில் முனையங்களை கடலோர நிலப்பகுதி மற்றும் துறைமுகங்களுடன் இணைக்கவும் வழி செய்யப்படுகிறது. இதில்  குறிப்பாக, இந்த வழித்தடம் மூலம் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறும் நிலையில், சர்வதேச உற்பத்தி இணைப்புகள் மற்றும் இந்திய தயாரிப்புகளின் பங்கு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

மேலும் சாலை கண்காணிப்பு மற்றும் கூடுதலாக, தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் திட்டமிடலை மேம்படுத்தவும், மேம்பட்ட தொழில்நுட்பங்களின் மூலம் சாலை பாதுகாப்பு மேம்பாட்டு திட்டங்களும் வலுவடையவும்  இந்தத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என்று மத்திய நிதியமைச்சகம் கூறியுள்ளது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/asia-development-bank-approved-loan-for-chennai-kanniyakumar-road-maintenance-314842/