10 06 2021 பீகாரில் கொரோனா இரண்டாவது அலையில் 5 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டதாக அரசு கூறினாலும், மறு ஆய்வில் இறப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த முன்று நாட்களாக இந்தியா நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் மூன்று நாட்களாக ஒரு லட்சத்துக்கும் குறைவாக, கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இருந்து வருவது தான். கடந்த 24 மணி நேரத்தில் 92,596 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6,148 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3 லட்சத்து 59 ஆயிரத்து 676 ஆக உள்ளது.
பீகாரில், கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிகையை அரசு மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அதை மறு ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கொரோனா முதல் அலையில் உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 1,600 பேராக இருந்தது. இரண்டாவது அலையில், 5,500 இறப்புகள் மட்டும் பதிவானதாக அம்மாநில அரசு சொல்லி வந்தது. மறு ஆய்வு அறிக்கையின்படி ஏப்ரல் மாதம் முதல் ஜூன் 7ஆம் தேதி வரை 7,775 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
பாட்னாவில் மட்டும் 2,203 பேர் உயிரிழந்துள்ளனர். முசாப்ஃபர்பூரில் 609 பேரும் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் சொந்த ஊரானா நலாந்தாவில் 222 பேரும் உயிரிழந்ருப்பது மறு ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
source https://news7tamil.live/bihar-govt-under-reported-the-corona-deaths.html