வியாழன், 10 ஜூன், 2021

இணைய தளங்கள் முடங்கியது ஏன்?

09.06.2021 

Fastly internet outage that hit major websites globally

செவ்வாய்க்கிழமை அன்று உலகின் மிக முக்கியமான செய்தி நிறுவனங்களின் இணைய தளங்கள் உட்பட பல நிறுவனங்களின் இணைய சேவைகள் முடங்கியது. அமெரிக்க கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை வழங்குநரான ஃபாஸ்ட்லியின் கண்டெண்ட் டெலிவரி நெட்வொர்க்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை அன்று அரைமணி நேரம் இந்த தளங்கள் முடங்கியது.

உலகளாவிய இணைய செயலிழப்பு: எந்த வலைத்தளங்கள் பாதிக்கப்பட்டுள்ளன?

அமேசான்.காம், ரெடிட், ட்விட்ச், ஸ்பாடிஃபை, பிண்டெரெஸ்ட், ஸ்டேக் ஓவர்ஃப்ளோ, கிட்ஹப், gov.uk, ஹுலு, எச்.பி.ஓ மேக்ஸ், குரா, பேபால், விமியோ மற்றும் ஷாப்பிஃபி ஆகியவை சில முக்கிய இணையங்களாகும். பாதிப்புக்குள்ளான முக்கிய செய்தி வலைத்தளங்கள் பைனான்சியல் டைம்ஸ், தி கார்டியன், நியூயார்க் டைம்ஸ், சி.என்.என் மற்றும் வெர்ஜ் போன்ற இணையங்களும் அடங்கும். 

இந்த வலைதளங்களில் சேவையை பெற முயன்றவர்களில் பலருக்கும் 503 எரெர் காட்டப்பட்டிருக்கும். இது உலகளாவிய சேவையை பெற முடியவில்லை என்பதை குறிப்பிட்டுள்ளது.

ஃபாஸ்ட்லி என்றால் என்ன?

சி.டி.என், எட்ஜ் கம்ப்யூட்டிங், கிளவுட் ஸ்டோரேஜ் சேவைகளை வழங்கும் கிளவுட் கம்ப்யூட்டிங் சேவை வழங்குநராக ஃபாஸ்ட்லி உள்ளது. செவ்வாய்க்கிழமை அன்று இந்திய நேரப்படி மாலை 3.28 மணிக்கு நாங்கள் தற்போது எங்கள் சிடிஎன் சேவைகளுடன் செயல்திறனுக்கான சாத்தியமான தாக்கத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

அதன் பிறகு ஒரு மணி நேரம் கழித்து, பிரச்சினை அடையாளம் காணப்பட்டு ஒரு தீர்வு பயன்படுத்தப்பட்டது. உலகளாவிய சேவைகள் திரும்பும்போது வாடிக்கையாளர்களால் இணையங்கள் “லோட் ஆவதை” எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியது. இந்தியாவில் சென்னை, மும்பை மற்றும் புது டெல்லி உட்பட பகுதிகளில் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சி.டி.என் என்றால் என்ன?

ஒரு சி.டி.என் என்பது புவியியல் ரீதியாக விநியோகிக்கப்படும் சேவையகங்களைக் குறிக்கிறது, அவை இணைய உள்ளடக்கத்தை விரைவாக வழங்குவதற்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றன. தொலைதொடர்பு சேவை வழங்குநர்களின் நெட்வொர்க்குகளுக்கு நெருக்கமான உள்ளடக்கத்தை அவை வைத்திருக்கின்றன. இன்று உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான வலை போக்குவரத்து சி.டி.என் மூலம் இயக்கப்படுகிறது.

நெட்ஃப்ளிக்ஸ், ஃபேஸ்புக் மற்றும் அமேசான் போன்ற நிறுவனங்கள் உலக நூலகங்களில் அதிக தரவுகளை வைத்திருக்கின்றன. உள்ளடக்கம் எங்கே அதிகம் பயன்படுத்தப்படும் என்பதை அறிந்து பிராந்திய ரீதியான சேவைகளை அவை வழங்குகின்றன. அனைத்து வாடிக்கையாளர்களும், இந்நிறுவனங்களின் கன்டெண்ட்டுகளை விரைவாக பெற உறுதி அளிக்கின்றன. இணைய தாக்குதல் மற்றும் ட்ராஃபிக் ஸ்பைக்குகளில் இருந்து இணையத்தை காக்க பெரும்பாலான நிறுவனங்கள் சி.டி.என்களை நம்புகின்றன.

சி.டி.என்களை நம்பியுள்ள இணையங்கள் முடங்குவது இது ஒன்றும் முதல்முறையல்ல. முன்பாக க்ளவுட் ஃப்ளேரென்ற நிறுவனத்தில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக அதன் மூலம் இயங்கி வந்த இணையங்கள் முடங்கியது. கிளவுட்ஃப்ளேர் தடுமாற்றம் காரணமாக டிஸ்கார்ட், ஃபீட்லி, பாலிடிகோ, ஷாப்பிஃபை, மற்றும் லீக் ஆஃப் லெஜண்ட்ஸ் போன்ற தளங்களின் சேவைகளும் முடங்கியது.

source https://tamil.indianexpress.com/explained/what-caused-the-fastly-internet-outage-that-hit-major-websites-globally-312058/