11 06 2021 லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியாக, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரபுல் கோடா படேல் பொறுப்பேற்றுள்ளார். இவர், லட்சத்தீவுகளில் மாட்டிறைச்சிக்குத் தடை மது விற்பனைக்கு அனுமதி உட்பட பல்வேறு சட்டத் திருத்தங் களை அமல்படுத்த திட்டமிட்டுள்ளார். இதையடுத்து பிரபுல் படேலை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் லட்சத்தீவுகளில் பிறந்த நடிகை ஆயிஷா சுல்தானா, மலையாளத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்றார். அப்போது கொரோனா பாதிப்பு இல்லாத லட்சத்தீவுகளில் தொற்று பரவ, பிரபுல் படேல் காரணம் என்று விமர்சித்தார். லட்சத்தீவுகளை அழிக்க மத்திய அரசு அனுப்பி வைத்த உயிரி ஆயுதம் (bio-weapon) என்று அவரை கடுமையாக விமர்சித்தார்.
இதையடுத்து லட்சத்தீவுகளின் பாஜக தலைவர் அப்துல் காதர், சுவரொட்டி காவல் நிலையத்தில் ஆயிஷா சுல்தானா மீது புகாரளித்தார். இதையடுத்து அவர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஆயிஷா, தமது கருத்துக்களை திரும்பப் பெற போவதில்லை என்று கூறி இருக்கிறார்.
லட்சத்தீவுகள் நிர்வாக அதிகாரியை உயிரி ஆயுதம் என்று விமர்சித்த நடிகை ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
source https://news7tamil.live/sedition-case-against-lakshadweep-activist-aisha-sultana.html