தண்டனைக்காலம் முடிந்தும் வெளியில் விடாத நிலையில், இது தொடர்பாக பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பலனளிக்காததால் இலங்கை அகதிகள் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்பாடுத்தியுள்ளர்.
திருச்சி ஏர்ப்போர்ட் அருகே சுப்பிரமணியபுரத்தில் பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில் சிறப்பு அகதிகள் முகாம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது. குற்ற வழக்குகளில் சிக்கும், இலங்கைத் தமிழர்கள், வங்கதேசம், நைஜீரியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த கைதிகள் இங்கு அடைக்கப்படுவது வழக்கும். இதில தற்போது 80 இலங்கை அகதிகள் உட்பட சுமார் 1200-க்கு மேற்பட்ட வெளியாட்டு கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்
சிறைச்சாலை போல் இல்லாமல் அனைத்து வசதிகளும் உள்ள இந்த வளாகத்தில். பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தண்டனைக்காலம் முடிந்தும் தங்களை தங்கள் நாட்டிற்கு அனுப்பாமல் சிறப்பு முகாமில் அடைத்து வைத்திருப்பதாக கூறி கைதிகள் பலரும் அவ்வப்போது ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், சமீபத்தில் எங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என்று அரசுக்குக் கோரிக்கை வைத்து பல கட்டத்தில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற அரசு முதற்கட்டமாக கடந்த மாதம் 12 கைதிகளை அகதிகள் முகாமிலிருந்து வெளியிட்டது. இதனால் தங்களையும் விடுவிக்க வேண்டும் என்று கூறி 10-க்கும் மேற்பட்ட கைதிகள் கடந்த மாதம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. இதனால் விரக்தியடைந்த போராட்டகார்ர்களில் ஒருவர், வயிற்றைக் கிழித்துக்கொண்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். மற்றொருவர் மரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.
மேலும் ஆறு பேர் அதிக அளவிலான தூக்க மாத்திரையைச் சாப்பிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தி வருகிறார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamil-srilankan-tamilnals-sucide-attamted-in-special-camp-in-trichy-333753/