06 08 2021
மாநிலங்களில் உள்ள இதர பின் தங்கிய வகுப்பினரை அடையாளம் காண்பதற்காக மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில், 102வது அரசியல் அமைப்பு திருத்த மசோதாவில் உள்ளா சில கூறுகளை அரசாங்கம் தெளிவுபடுத்த புதிய மசோதாவை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிராந்திய கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சியில் உள்ள ஓ.பி.சி. தலைவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றாகும்.
அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ள 127வது திருத்த மசோதாவில் அரசியலமைப்பு பிரிவு 342ஏவில் உள்ள சரத்துகள் 1 மற்றும் 2-இல் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். மேலும் 342 ஏ(3) என்ற ஷரத்தை அறிமுகம் செய்யும். இது மாநிலங்களின் பட்டியலை பராமரிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் பிரிவாகும். பிரிவு 366(26C) மற்றும் 338B (9) ல் திருத்தங்கள் அறிவிக்கப்படும். மேலும் மாநிலங்கள் என்.சி.பி.சி பட்டியலை பார்க்காமல், நேரடியாக ஓ.பி.சி. மற்றும் எஸ்.இ.பி.சி. ஆகியவற்றை அறிவிக்க முடியும். மாநில மற்றும் மத்திய அரசுகளின் அதிகாரங்களை ஒன்றாக இணைத்து வரும் பட்டியல் குழப்பங்களை உருவாக்கியுள்ளது. அறிமுகமாகும் புதிய ஷரத்து அதனை தெளிவுபடுத்தும் என்று அமைச்சரவை வட்டாரங்கள் அறிவித்துள்ளன.
அமைச்சரவை திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளாது. புதிய மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும். இது ஏற்கனவே திருத்தப்பட்ட 102வது அரசியலமைப்பு திருத்தத்தில் சில தெளிவுகளை வழங்கும் என்று மத்திய அமைச்சர் ஒருவர் கூறினார்.
இந்த மசோதாவை, அரசியல் அமைப்பு திருத்தத்தை, நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள சலசலப்புக்கு மத்தியில் அரசாங்கம் மசோதாவை நிறைவேற்றுவதில் நம்பிக்கையுடன் உள்ளதா என்று கேள்வி எழுப்பிய போது, நாங்கள் அதை சரியான வழியில் செய்வோம். அனைத்தும் சரியான முறைப்படி நடக்கும் என்று அமைச்சர் கூறினார்.
அரசியலமைப்பு திருத்த மசோதா இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்று நிறைவேற்றப்பட வேண்டும். உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு குறைவில்லாமல் நிறைவேற்றப்பட வேண்டும்.
மராட்டிய இடஒதுக்கீடு தீர்ப்பில் அரசியலமைப்பின் 102 வது திருத்தத்தின் நீதிமன்றத்தின் விளக்கத்தை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் ஒரு மறுஆய்வு மனுவை தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகளை அடையாளம் கண்டு அறிவிக்க மாநிலங்களின் அதிகாரத்தை ரத்து செய்தது.
ஜூலை 30 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய வகுப்புகளை அடையாளம் காண மாநிலங்களுக்கு அதிகாரம் வழங்கக் கோரும் திருத்தத்தை அரசு கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று செய்தி வெளியிட்டிருந்தது – இது ஓபிசி சமூகத்தின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றாகும்.
இந்த திருத்தம், சமூக மற்றும் கல்வி ரீதியாக பின் தங்கிய வகுப்பினரை அறிவிக்கும் அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கும், இந்த பட்டியலில் திருத்தம் கொண்டு வரும் அதிகாரத்தை நாடாளுமன்றத்திற்கும் வழங்கியுள்ளதே தவிர, மாநிலங்களின் அதிகாரத்தை நீக்க வழங்கப்படவில்லை. இது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு (என்சிபிசி) அரசியலமைப்பு அந்தஸ்து வேண்டிய கோரிக்கையை நிறைவேற்ற உருவாக்கப்பட்டுள்ளது என்று பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.
மே 5ம் தேஎதி அன்று, மாராட்டியர்களுக்கு மகாராஷ்ட்ராவில் இட ஒதுக்கீடு அளிக்கும் அதிகாரத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், 2018ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 102வது அரசியமலைப்பு திருத்த மசோதா, சமூக மற்றும் கல்வி ரீதியாக பின் தங்கிய வகுப்பினரை மத்திய அரசு மட்டுமே அடையாளம் காண முடியுமே தவிர மாநில அரசுகள் அல்ல என்று கூறியது.
அடுத்த வருடம் தேர்தலை எதிர்கொண்டிருக்கும் முக்கிய மாநிலங்களில் ஓ.பி.சியின் வாக்கு வங்கிகளை அதிகம் நம்பியிருக்கும் பாஜகவிற்கு இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஓபிசி சமூகத்தினரிடையே, குறிப்பாக அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த உத்தரபிரதேசத்தில் அதன் ஆதரவு அப்படியே இருப்பதை பாஜக விரும்புகிறது. உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் மற்றும் பிஎஸ்பி பலவீனமடைந்துள்ள நிலையில், சமாஜ்வாடி கட்சி ஓபிசி வாக்குகளில் ஒரு பகுதியை கைப்பற்றி சிறுபான்மை வாக்குகளை ஒருங்கிணைக்கலாம் என்று பாஜகவினர் அஞ்சுகின்றனர்.
மத்திய அரசின் அதிகாரப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் ஓ.பி.சி.க்கு அரசியலமைப்பு அந்தஸ்து வழங்கி உயர்த்தப்பட்டுள்ளது. . மத்திய ஓபிசி பட்டியலில் மாற்றங்களை செய்ய நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது.
102வது திருத்த சட்டம், 2018, தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு National Commission for Backward Classes (NCBC). அரசியல் அமைப்பு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதன்மூலம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் உள்ள குறைகளை ஆராய இந்த ஆணையத்திற்கு அதிகாரம் கிடைக்கிறது. அரசியல் அமைப்பு திருத்த மசோதா 127வை அறிமுகம் செய்வதற்கான நேற்றைய ஒப்புதல் ஒரு தொடர் முயற்சியாகும். உச்ச நீதிமன்ற விளக்கத்தால் பறிக்கப்பட்ட OBC களின் மாநிலப் பட்டியலைப் பராமரிக்க மாநில அரசுகளின் அதிகாரங்களை மீட்டெடுக்க இந்தத் திருத்தம் அவசியம் என்று கண்டறியப்பட்டுள்ளது, ”என்று ஒரு அமைச்சக அதிகாரி கூறினார்.
மாநில பட்டியல் நீக்கப்படும் பட்சத்தில் சுமார் 671 ஓ.பி.சி. வகுப்பினரால் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை பெற இயலாது. இது ஓ.பி.சி. வகுப்பினரின் ஐந்தில் ஒரு பங்கினரை பாதிக்கும்.
இந்தியா ஒரு கூட்டாட்சி அமைப்பைக் கொண்டுள்ளது மற்றும் அந்த கட்டமைப்பைப் பராமரிக்க, இந்த திருத்தம் அவசியம்.ஒரு மாநிலம் அல்லது பிராந்தியத்திற்கு குறிப்பிட்ட சமூக-பொருளாதார தேவைகளுக்கு விரைவாக பதிலளிக்க இது மாநிலங்களை அனுமதிக்கிறது, ”என்று ஒரு அதிகாரி கூறினார்.
source https://tamil.indianexpress.com/india/obc-list-in-house-next-week-bill-to-restore-states-powers-329712/