வியாழன், 7 அக்டோபர், 2021

முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உளவுப் பிரிவு அதிகாரி கைது

 

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்க முயன்ற அதன் முன்னாள் உளவுப் பிரிவு அதிகாரியை, என்ஐஏ அதிகாரிகள் நேற்று சென்னையில் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் இலங்கையைச் சேர்ந்த சத்குணம் (எ) சபேசன் என்பதும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் பெரும் தொகையை விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சிக்காக முன்னாள் வீரர்களுக்கு வழங்கியுள்ளது உறுதியானது.

மேலும், அவருக்கு சொந்தமாக வளசரவாக்கம், ஐய்யப்பந்தாங்கல் உட்பட பல இடங்களில் உள்ள இடங்களைச் சோதனை செய்ததில்,முக்கிய பொருள்களும், சமீபகாலமாக தமிழ்நாட்டிலிருந்து  இலங்கைக்கு பணம் அணுப்பிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் சத்குனம் ஈடுபடுவதாக என்ஐஏ அலுவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் தீவிரமாகக் கண்காணித்ததில், அவர் ஆயுதங்களை விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் தொகையை விடுதலைப் புலிகள் இயக்க நிர்வாகிகளுக்கு வழங்கிவந்துள்ளது தெரியவந்துள்ளது.

நம்பிக்கையானவரில் ஒருவர்
விடுதலைப் புலிகளின் தலைவர் வி.பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய நபரில் சத்குனமும் ஒருவர் ஆவர்.  அவருக்கு நெருக்கமாகவும் பாதுகாப்பின் ஒரு பகுதியாக இருந்ததாகவும் வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. 
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர் தமிழ்நாட்டில் அமைப்பின் திட்டங்களை வழிநடத்த மதுரைக்கு அனுப்பப்பட்டுள்ளார். ஆனால், அவர் போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுக் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சிறையில் இருந்ததாகவும், பின்னர் வெளியே வந்ததும் சர்வதேச ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்குடன் தொடர்புகளை ஏற்படுத்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த மார்ச் மாதம் லட்சத்தீவின் மினிக்காய் கடற்கரையில் 5 ஏகே 47 துப்பாக்கிகள், 1,000 தோட்டாக்கள், 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள் ஆகியவற்றை கடலோரக் காவல் படை பறிமுதல் செய்தது. இதுதொடா்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த மே மாதம் இலங்கையைச் சோ்ந்த 6 பேர் மீது என்ஐஏ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனா். இந்தக் கடத்தல் சம்பவத்தில் சத்குணம் முக்கிய பங்கு ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

source https://tamil.indianexpress.com/tamilnadu/former-ltte-intelligence-officer-arrested-by-nia-in-chennai/

Related Posts: