வெள்ளி, 8 அக்டோபர், 2021

வேளாண் சட்டங்களை விமர்சித்த வருண் காந்தி, பிரேந்தர் சிங்; நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கிய பாஜக

  பாஜக அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த இரண்டு முக்கியத் தலைவர்களான வருண் காந்தி (எம்.பி) மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சௌத்ரி பிரேந்தர் சிங் ஆகியோர் பாஜகவின் நிர்வாகக் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வியாழக்கிழமை அன்று 80 உறுப்பினர்கள் அடங்கிய புதிய தேசிய நிர்வாகக் குழுவை அறிவித்தது பாஜக.

பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்ற தலைவர்களுடன், மூத்த கட்சி உறுப்பினர்களான முரளி மனோகர் ஜோஷி மற்றும் எல்.கே. அத்வானி ஆகியோர் இந்த நிர்வாக குழுவில் இருக்கின்றனர்.

பிரேந்தர் சிங், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு தன்னுடைய ஆதரவை வழங்கினார். வருண் காந்தி லக்கிம்பூர் கேரி வன்முறையில் இறந்து போன விவசாயிகளின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உ.பி. முதல்வர் யோகிக்கு கடிதம் ஒன்றை எழுதினார். உருவாக்கப்பட்ட புதிய கமிட்டியில் வருணின் தாய் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தியும் நீக்கப்பட்டுள்ளார்.

source https://tamil.indianexpress.com/india/bjp-panel-rejig-chaudhary-birender-singh-varun-gandhi-out-after-criticising-farm-laws-352736/

Related Posts: