புதன், 9 பிப்ரவரி, 2022

உ.பி தேர்தல்: 20 லட்சம் அரசு வேலை, 10 நாளில் விவசாய கடன் தள்ளுபடி – காங்கிரஸ் வாக்குறுதிகள்

 9 2 2022 

உத்தரப் பிரதேசத்தில் நாளை (பிப்ரவரி -10) முதல்கட்ட தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இன்று தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்த்ல ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நாளை(பிப்ரவரி 10) நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி வெளியிட்டார்.

  • எந்தவிதமான நோய்க்கும் ரூ.10 லட்சம் வரை அரசு உதவி வழங்கப்படும்.
  • 20 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும். பாஜக அரசாங்கத்தில் 12 லட்சம் வேலைகள் காலியாக இருக்கிறது. அதை நிரப்புவது மட்டுமின்றி கூடுதலாக 8 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.
  • ஆட்சிக்கு வந்தால், நெல் ரூ.2,500க்கும், கரும்பு ரூ.400க்கும் வாங்கப்படும்
  • ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும்.
  • மின்சாரக் கட்டணம் பாதியாக குறைப்படும்.
  • கோவிட் பாதித்த குடும்பங்களுக்கு தலா ரூ.25,000 வழங்கப்படும்
  • 10, 12 ஆம் வகுப்பு பயிலும் பெண்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள்
  • கல்லூரி செல்லும் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டர்

செவ்வாயன்று சமாஜ்வாடி, பாஜக கட்சிகள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் (MGNREGA)கீழ் வேலைவாய்ப்பை அதிகரித்தல், பெண்களுக்கு அரசு வேலைகளில் 33 சதவீத இடஒதுக்கீடு, 2025க்குள் விவசாயிகளை “கடன் இல்லாதவர்களாக மாற்றுதல், நகர்ப்புற வேலை உறுதிச் சட்டம் போன்றவை சமாஜ்வாதி கட்சியின் வாக்குறுதிகளில் முக்கியமானவை ஆகும்.

பாஜக தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகளுக்கு பாசனத்துக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும், ‘லவ் ஜிகாத்’ வழக்குகளில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் ஆகியவை முக்கியமானவை ஆகும்.

source https://tamil.indianexpress.com/india/congress-promises-to-waive-off-up-farmer-debt-within-10-days-of-coming-to-power-409004/