வெள்ளி, 30 செப்டம்பர், 2022

2023 அக்டோபர் முதல் அனைத்து கார்களிலும் 6 ஏர்பேக்குகள் கட்டாயம்

 30 09 2022

அனைத்து பயணிகள் கார்களிலும் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கும் திட்டத்தை அக்டோபர் 1, 2023க்கு ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தார்.

அக்டோபர் 1, 2022 முதல் எட்டு இருக்கைகள் கொண்ட வாகனங்களில் ஆறு ஏர்பேக்குகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. நாட்டில் வாகனத் துறை எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோகச் சங்கிலித் தடைகளை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் கூறினார்.

வாகனத் துறையால் எதிர்கொள்ளப்படும் உலகளாவிய சப்ளை சங்கிலித் தடைகள் மற்றும் பெரும் பொருளாதாரச் சூழலில் அதன் தாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பயணிகள் கார்களில் (எம்-1 வகை) குறைந்தபட்சம் ஆறு ஏர்பேக்குகளைக் கட்டாயமாக்கும் திட்டத்தை 2023அக்டோபர் 1 முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது,” என்று நிதின் கட்கரி ட்வீட் செய்துள்ளார்.

மோட்டார் வாகனங்களின் விலை மற்றும் மாறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அவற்றில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பே முதன்மையான முன்னுரிமை என்றும் நிதின் கட்கரி கூறினார்.

source https://tamil.indianexpress.com/india/govt-defers-mandate-of-six-airbags-in-passenger-cars-to-october-2023-says-nitin-gadkari-518288/