சனி, 24 செப்டம்பர், 2022

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு; ஆய்வில் தகவல்

 

24 9 2022

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை 8.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக சிஎம்ஐஇ அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு பல்வேறு பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.இதனால் வேலை வாய்ப்பின்மையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் பொருளாதாரத்தை கணிக்கும் சிஎம்ஐஇ என்ற அமைப்பு வேலை வாய்ப்பின்மை குறித்து ஆய்வு செய்துள்ளது.

அதன் தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் வேலை வாய்ப்பின்மை விகிதம் 8.3 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதில், வேலைவாய்ப்பின்மை அதிகம் காணப்படும் மாநிலங்களில் ஹரியானா முதல் இடமும், சத்தீஸ்கர் மாநிலம் கடைசி இடத்திலும் உள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் எடுக்கப்பட்ட தரவின் அடிப்படையில் நகரப்பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை 9.57 சதவிதிகமாகவும், கிராமப்பகுதிகளில் 7.68 சதவிகிதமாகவும் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை ஹரியானாவில் 37.3%, ஜம்மு காஷ்மீரில் 32.8%, பஞ்சாப்பில் 7.4%, ஹிமாச்சல் பிரதேசம் 7.3%, ராஜஸ்தான் 31.4%, உத்தரபிரதேசம் 3.9%, டெல்லி 8.2%, பீகார் 12.8%, குஜராத் 2.6%, மத்திய பிரதேசம் 2.6%, திரிபுரா 16.3%, மேற்குவங்காளம் 7.4%, ஜார்கண்ட் 17.3%, ஒடிசா 2.6%, சத்திஸ்கர் 0.4 சதவீதம், மகாராஷ்டிரா 2.2%, தெலங்கானா 6.9%, கோவா 13.7%, கர்நாடகா 3.5%, ஆந்திரா 6%, புதுச்சேரி 5.2%, கேரளா 6.1%, தமிழ்நாடு 7.2 சதவிகிதமாகவும் உள்ளது.

கடந்த ஜூலை மாதத்தில் 6.8 சதவிகிதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை, ஆகஸ்ட் மாத தரவுகளின் படி 8.3 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.


source https://news7tamil.live/rising-unemployment-in-india-information-in-the-study.html

Related Posts: