23 9 2022
பி.ரஹ்மான் கோவை
கோவை மாட்டத்தில் ஒரு கட்சி அலுவலகங்களில் அடுத்தடுத்து நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில்,கோவையின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கோவையில் சில நாட்களாக பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்று வருகிறது.இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்,தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி தாமரை கண்ணன் கோவை வந்தார்.
தொடர்ந்து அவர் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையாளர்கள், சிறப்பு அதிரடி படை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சுமார் 30 நிமிடம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பின் அவர் கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்கிறார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-coimbatore-petrol-bomb-police-investigation-update-515301/