ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

உ.பி. சட்டப்பேரவையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பாஜக எம்எல்ஏ – வீடியோ வைரல்

 25 09 2022

உத்தரப்பிரதேச சட்டமன்றத்திற்குள் பாஜக எம்எல்ஏ ஒருவர் புகையிலை பயன்படுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

உத்தரபிரதேச சட்டப்பேரவையின் மலைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராகேஷ் குமார் கோஸ்வாமி கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது தனது செல்போனில் ஆன்லைன் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தார்.

இந்த வீடியோ அண்மையில் இணையதளங்களில் வைரலாக பரவியது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் ஒரு பாஜக எம்எல்ஏ சர்ச்சையில் சிக்கியுள்ளார். சட்டப்பேரவையில் கூட்டம் நடைபெற்று கொண்டிருந்தபோது அவர் புகையிலை பயன்படுத்துவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது.

இதற்கு அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. அவையின் மாண்பை குழைக்கும் வகையில் பாஜக எம்.எல்.ஏக்கள் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. மேலும் மக்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லாத பாஜகவினர், சட்டப்பேரவையை கேலிக்கை விடுதி போல பயன்படுத்தி வருவதாக கடுமையாக சாடியுள்ளது.

 

-இரா.நம்பிராஜன்



source https://news7tamil.live/up-bjp-mla-caught-in-controversy-again-in-the-legislative-assembly-video-viral.html