வியாழன், 29 செப்டம்பர், 2022

இலவசமாக ஒரு மாதத்தில் எத்தனை முறை பணம் எடுக்கலாம்? உங்க வங்கி ஏ.டி.எம் ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க!

 28 09 2022

இலவசமாக ஒரு மாதத்தில் எத்தனை முறை பணம் எடுக்கலாம்? உங்க வங்கி ஏ.டி.எம் ரூல்ஸ் தெரிஞ்சுக்கோங்க!

இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 1, 2022 முதல் வங்கிகளுக்கு அனுமதிக்கப்பட்ட கட்டணங்களை உயர்த்தியுள்ளது. ஆகையால் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்ட இலவச ஏடிஎம் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைத் தாண்டினால், கூடுதல் தொகையை கட்டணமாகச் செலுத்த வேண்டும்,
இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் பணம் அல்லது பணமில்லாத ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. அதாவது அடிக்கடி ஏ.டி.எம்.மில் பேலன்ஸ் செக் செய்தாலும் கட்டணம் பிடிக்கப்படும்.

தற்போது ஒவ்வொரு வங்கிகளும் எத்தனை இலவச பரிவர்த்தனைகள் வழங்குகின்றன என்று பார்ப்போம்.

எஸ்.பி.ஐ., ஏ.டி.எம்., கட்டணங்கள்

மும்பை, கொல்கத்தா, டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் போன்ற பகுதிகளில் உள்ள ஏடிஎம்களில் ரூ. 1 லட்சம் மாதாந்திர இருப்பை பராமரிக்கும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு 5 இலவச பரிவர்த்தனைகளை எஸ்பிஐ வழங்குகிறது.
மற்ற வங்கி ஏடிஎம்களில் இலவச பரிவர்த்தனை வரம்பை 3 ஆக வங்கி நிர்ணயித்துள்ளது. இலவச வரம்பை மீறி நடக்கும் பரிவர்த்தனைகளுக்கு வங்கி ரூ.5 முதல் ரூ.20 வரை வசூலிக்கிறது.

இலவச வரம்பு முடிந்தவுடன் அதன் ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க ரூ.10 வசூலிக்கப்படுகிறது மற்றும் இலவச வரம்பை மீறிய பிற ஏடிஎம்களில் இருந்து நிதி பரிவர்த்தனைகளுக்கு ரூ.20 வசூலிக்கப்படுகிறது.
எஸ்பிஐ ஏடிஎம்மில் ரூ 5, எஸ்பிஐ அல்லாத ஏடிஎம்களில் ரூ 8 நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கு (வங்கி இருப்பை சரிபார்ப்பது போன்றவை) வங்கி கட்டணமாக வசூலிக்கிறது.

இருப்பினும், வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சத்திற்கு மேல் மாதாந்திர இருப்பை வைத்திருந்தால், அவர்கள் எஸ்பிஐ மற்றும் பிற வங்கி ஏடிஎம்களில் வரம்பற்ற இலவச பரிவர்த்தனைகளை அனுபவிக்க முடியும்.
ஒரு வாடிக்கையாளருக்குக் கணக்கில் போதுமான இருப்பு இல்லை என்றால், இந்த காரணத்தால் பரிவர்த்தனை நிராகரிக்கப்பட்டால், வங்கி ரூ.20 அபராதமாக வசூலிக்கும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்., கட்டணங்கள்

பெருநகரங்களில் 3 முறை இலவசமாக ஏடிஎம்மில் பணம் எடுப்பதையும், மற்ற பகுதிகளில் அதிகபட்சமாக 5 முறை ஏடிஎம்களில் இலவச பணம் எடுப்பதையும் வங்கி வழங்குகிறது.
இந்த வரம்பு முடிந்த பிறகு, PNB ATM ஐப் பயன்படுத்துவதற்கு 10 ரூபாயும், மற்ற வங்கி ATMகளைப் பயன்படுத்தும் போது 20 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கிறது.

ஹெச்.டி.எஃப்.சி., வங்கி ஏ.டி.எம்., கட்டணங்கள்

வாடிக்கையாளர்கள் ஹெச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம்மில் இருந்து மாதத்திற்கு 5 முறைக்கு மேல் ஏடிஎம்மில் பணம் எடுத்தாலும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களை 3 முறைக்கு மேல் பயன்படுத்தினாலும் வங்கி ரூ.21 கட்டணமாக வசூலிக்கிறது.


source https://tamil.indianexpress.com/business/how-many-free-cash-withdrawals-allowed-in-sbi-pnb-and-hdfc-atms-517372/