26 9 2022
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் சாதி பாகுபாடு கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசின் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு வர்ண முறைகள் என்ற தலைப்பில் சாதிய வேறுபாடுகளை கற்பித்தும், சூத்திரர்கள்,பஞ்சமர்கள் எனவும் பிளவுபடுத்தி பாடம் கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.
இந்த நிலையில் மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாட்டை கற்பிப்பதற்கு தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து இன்று (செப்.26) சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் சாதி பாகுபாடு கற்பிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வர்ணாசிரமம் பாடம் இடம்பெற்று இருக்கும் பாடப்பிரிவை கிழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவ்வமைப்பினர் 30க்கும் மேற்பட்டவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த போலீசார் கைது செய்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் வர்ணாசிரம முறை என்ற பெயரில் ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு பிராமணர் சூத்திரர் என்பவர்கள் யார் என்பதை வகைப்படுத்தி மாணவர்கள் மத்தியில் சாதி வெறியை தூண்டி வருகின்றனர்.
அதேபோல் தலித்துகள் இறந்த விலங்குகளை அறுப்பதும் உண்பதும் தான் என பாடத்திட்டத்தில் தெரிவித்துள்ளனர். கோவை வரும் அண்ணாமலை முதலில் இந்த பாடத்திட்டத்தை நீக்க போராட்டம் நடத்தட்டும்” என்றார்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
source https://tamil.indianexpress.com/tamilnadu/periyar-dravidar-kazhagam-protests-to-remove-sanadana-sections-from-cbse-text-book-516459/