கணியாமூர் கலவரத்தில் ஈடுபட்டு கைதான நான்கு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது இதுவரையில் 12 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் தேதி கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி என்ற பிளஸ் டூ படிக்கும் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறி வன்முறையில் முடிந்தது அப்போது பள்ளி முழுவதும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
பள்ளியில் உள்ள பொருட்கள் இந்த வன்முறையில் ஈடுபட்டு பள்ளியில் நின்றிருந்த டிராக்டரை எடுத்து பஸ்ஸில் மோதி பஸ்சுக்கு தீ வைத்த கள்ளக்குறிச்சி வட்டம் பங்காரம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதிவேல் மகன் ஜெயவேல் (வயது 22), அவருடன் கள்ளக்குறிச்சி வட்டம் க . மாமனந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஜாபர் அலி மகன் இப்ராஹிம் (வயது 26) மக்கள் அதிகாரம் மாவட்ட தலைவராக உள்ள சங்கராபுரம் வட்டம் எஸ் வி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ராமலிங்கம் (வயது 56) இவர் பெண் போலீசாரை கற்களை வீசி தாக்கியதாகவும், மாணவி ஸ்ரீமதி மரணத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டும் வகையில் போஸ்டர் ஒட்டிய சின்ன சேலத்தைச் சேர்ந்த குமார் மகன் விஜய் (வயது 26) ஆகிய நான்கு பேரையும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பரிந்துரையின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் நான்கு பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த கலவர வழக்கு தொடர்பாக இதுவரை 12 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து சாராய விற்பனை செய்து வந்த சாராய வியாபாரி இருவரும் குண்டர் தடுப்பு காவலில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர் மேலும் இன்று ஒரே நாளில் ஆறு பேரைக் குண்டர் தடுப்பு காவல் அடைக்க உத்தரவிட்டு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.
source https://news7tamil.live/kanyamoor-riots-4-more-under-goon-act.html