26 09 2022
பீகார் மாநிலம் பாட்னாவில் இந்த ஆண்டு ஜூலை 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட பேரணியில் தாக்குதல் நடத்த பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு திட்டமிட்டதாக அமலாக்கத்துறை பரபரப்பு குற்றஞ்சாட்டி உள்ளது.
நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் கடந்த செப்.22ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை, அமலாக்கத்துறை இணைந்து சோதனை மேற்கொண்டது. தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டல், தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக இருந்ததாக குற்றஞ்சாட்டி சோதனை நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிஎப்ஐ, எஸ்டிபிஐ ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரளாவின் கோழிக்கோட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர் முஹமது ஷபீக் பயேத் அவர் வீட்டில் வைத்து காலை 5.35 மணிக்கு கைது செய்யப்பட்டார். இந்த அமைப்பின் மீது மத நல்லிணக்கத்தை சீர்குலைத்தல், பயங்கரவாதத்தை பரப்புதல், வகுப்புவாத கலவரங்களைத் தூண்டுதல், வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியை வழங்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. மேலும், பல முக்கிய நபர்கள் மற்றும் முக்கிய இடங்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல்களை நடத்த பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபெருட்கள் சேகரித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.
பி.எம்.எல்.ஏ-வின் கீழ் நடத்தப்பட்ட விசாரணையில், பல ஆண்டுகளாக பி.எஃப்.ஐ மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களின் வங்கி கணக்குகளில் சுமார் ரூ.120 கோடிக்கு மேல் ரொக்கப் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மிகப்பெரிய தொகை வங்கி கணக்கில் வைப்பு உள்ளது விசாரணை ஏஜென்சியின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது என என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்முறையைத் தூண்டுதல், பிப்ரவரி 2020 டெல்லி கலவரம், உ.பி ஹத்ராஸுக்கு பிஎப்ஐ, சிஎப்ஐ உறுப்பினர்களின் வருகை ஆகியவை அடங்கும். உத்தரப் பிரதேசத்தில் உள்ள முக்கிய நபர்கள் மற்றும் முக்கிய இடங்கள் மீது ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த பயங்கர ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை சேகரித்தல், பிரதமர் மோடியின் பாட்னா வருகையின் போது தாக்குதல் நடத்த திட்டமிடுதல் போன்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது.
மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் மற்றும் வகுப்புவாத கலவரங்களை தூண்டும் நோக்கத்துடன் உ.பி.யில் உள்ள ஹத்ராஸுக்கு பிஎப்ஐ, சிஎப்ஐ உறுப்பினர்கள் வருகை தந்ததையும் ஐஓ குறிப்பிட்டது. ஹத்ராஸ் வழக்கு விசாரணையில், பிஎப்ஐ உறுப்பினரும் சிஎப்ஐயின் தேசிய பொதுச் செயலாளர் கே.ஏ. ரவூப் ஷெரீப் பிஎப்ஐ உடன் இணைந்து குற்றவியல் சதியில் ஈடுபட்டது தெரியவந்தது. சட்டவிரோதமாக
ரூ. 1.36 கோடி மாற்றியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது,
“பயேத் கத்தாரில் பிஎப்ஐஉறுப்பினர் என்பதையும், அவரால் (பயேத்) நிதி மாற்றப்பட்டது என்பதையும் ரவூப் தெரிவித்தார். இது ரவூப் மற்றும் அவரது கூட்டாளிகளால் பெறப்பட்டது. ரவூப் டெல்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் சித்திக் கப்பன் உட்பட நான்கு கூட்டாளிகள் வகுப்புவாத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதற்காக ஹத்ராஸுக்குச் சென்றனர் என்றும் அவர்கள் உபி காவல்துறையால் கைது செய்யப்பட்டனர், ”என்றும் ஐஓ கூறியுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/rs-120-crore-in-bank-deposits-of-pfi-and-linked-entities-ed-515787/