வெள்ளி, 23 செப்டம்பர், 2022

முதல்வரை அவதூறாக சித்தரித்து போஸ்டர்;

 

முதல்வரை அவதூறாக சித்தரித்து போஸ்டர்; அண்ணாமலை உதவியாளர் கைது

சென்னையில் முதல்வர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போஸ்டர் ஒட்டிய விவகாரத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடசென்னை பகுதியில் கடந்த 11 ஆம் தேதி பல்வேறு தெருக்களில் முதலமைச்சர் ஸ்டாலினை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கை பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இந்த போஸ்டர்களை தி.மு.க.,வினர் கிழித்து எறிந்தனர்.

இதுதொடர்பாக, துறைமுகம் கிழக்குப் பகுதி தி.மு.க செயலாளர் ராஜசேகர் ஆகியோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், மாநகராட்சி இடங்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என்பதால் சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார் என்பவரும் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், முதலமைச்சரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டுமாறு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதும், முதலமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வாசகம் மற்றும் கார்ட்டூன்களை சித்தரித்து சிவகுருநாதனுக்கு அனுப்பியதும் தெரியவந்தது.

இதையடுத்து, தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமார் முருகனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


source https://tamil.indianexpress.com/tamilnadu/bjp-leader-annamalai-pa-arrested-for-controversy-poster-against-stalin-514458/

Related Posts:

  • ஏமாற்று விளம்பரங்கள் 1.வாங்காதீங்க வாங்காதீங்க னு ஊறுகாய் விளம்பரம் அப்பறம் ஏன்டா எல்லா ஊறுகாயிலும்permitted class preservatives(e211) ,acidity regulators,(e260,e330… Read More
  • எறும்பை பூதமாக்க ஊடகங்கள் எறும்பை பூதமாக்க ஊடகங்கள் குறிப்பாக யூத மற்றும் புதிதாக இணைந்துள்ள ஊடகங்கள் போட்டி போட்டு செயலாற்றுகிறது... முஸ்லிம்கள் மிக விழிப்பாக இருக்க வேண்டும்… Read More
  • விடிய விடிய --செங்கிஸ்கான் விடிய விடிய பீப் பாடலோடு குத்தாட்டம் !விடியும் வரை பீர் பாட்டிலோடு கொண்டாட்டம்!கடந்த வாரம் பீப் பாடலுக்கு கொதித்தசென்னையா இது ? கடந்த வாரம் வெள்ளத்… Read More
  • சென்னையில், சிக்கன் பிரியாணி எனக்கூறி, பூனைக்கறி பிரியாணி சென்னையில், சிக்கன் பிரியாணி எனக்கூறி, பூனைக்கறி பிரியாணி விற்பனை செய்யப்படும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாகவே, சில சிறிய சாலையோர கடைக… Read More
  • முடிந்த முயற்சி. நம்மால் முடிந்த முயற்சி. அல்லாஹ்வுக்காக !.சகோதரர்களே இந்த பெண் நேற்று இரவு சென்னையில் இருந்து ராமேஷ்வரம் ரயிலில் செல்லும்பொழுது தவறுதலாக… Read More