ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

21 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை

 

21 மாநிலங்களில் சிபிஐ அதிரடி சோதனை

இந்தியா முழுவதும் சிபிஐ 21 மாநிலங்களில் 59 இடங்களில் ஆபரேஷன் மெகா சக்ரா என்ற அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது.

இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசாருக்கு சிங்கப்பூர் மற்றும் நியூசிலாந்து நாட்டு காவல்துறையிடம் இருந்து கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், சிபிஐயில் உள்ள குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் பிரிவில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இந்தியாவிலிருந்து குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் வீடியோக்கள் அதிகம் cloud storage என்ற முறையில் பகிரப்படுவதாக தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில், குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் வீடியோக்களை அனுப்பும் நபர்களை அடையாளம் கண்டுபிடித்து 59 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

சோதனையில், 50க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து மொபைல்கள், லேப்டாப்புகள் டிஜிட்டல் கருவிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட எலக்ட்ரானிக் உபகரணங்களில் இருந்து ஆய்வு செய்த போது மிகப் பெரிய அளவிலான குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல் வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வீடியோக்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் அத்துமீறலில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் சிபிஐ தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும், தமிழகத்தில் கடலூர் மாவட்டத்திலும் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது குறிப்பிடதக்கது.

24 09 2022


source https://news7tamil.live/cbi-raidsall-over-india.html