சர்வதேச சந்தையில் விலை ஏற்றத்தின் காரணமாகவே சிலிண்டர் விலை அதிகரிப்பதாக
மத்திய இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி தெரிவித்துள்ளார்.
சென்னை நெசப்பாக்கத்தில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) நிரப்பும்
நிலையத்தையும் துவக்கி வைத்த மத்திய இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர்
ராமேஸ்வர் டெலி , பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு
இணைப்புகளையும் வழங்கினார். இதையடுத்து மேடையில் பேசிய அவர் கூறியதாவது:
நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அதனால் தான் தாமதம் ஆனது.
தமிழ்நாட்டை மனதிற்கு வைத்துக் கொண்டு தான் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தினை
செயல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் தான் 19 லட்சம் எல்பிஜி இணைப்பு திட்டம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மட்டும்தான் உஜ்வாலா 2.0 திட்டம் 100 சதவீத இலக்கை
எங்களால் எட்ட முடிந்தது. இருப்பினும் பின் தங்கிய அடித்தட்டு மக்களுக்கு
முழுமையாக இந்த திட்டத்தை கொண்டு செல்லும் வரையில் எங்களது பயணம் தொடரும்.
ESI மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் பல
இடங்களில் ESI மருத்துவமனைகள் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது
எண்ணூரில் இருந்து தூத்துக்குடி வரையிலான கேஸ் பைப் லைன் கொண்டு செல்லும்
பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் முடியும் நிலையில் உள்ளது. இதனால் தமிழ்நாடு பயனடையும்.
சிஎன்ஜி மூலமாக வாகனங்களை இயக்கினால் மாசு குறையும். அனைத்து பெட்ரோல்
நிலையகளில் சிஎன்ஜி நிலையம் அமைக்க வேண்டும். சிஎன்ஜி எரிவாயுகளின் தேவை நாட்டில் அதிகரித்து வருகிறது என்று பேசினார் ராமேஸ்வர் டெலி.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
காமராஜர் துறைமுகத்தில் நடைப்பெற்று வரும் பணி குறித்து ஆய்வு செய்தேன்.
பணிகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது. CNG எரிவாயு விலை பெட்ரோல் விலையை விட குறைவு. தமிழகத்தில் CNG எரிவாயு நிரப்பும் நிலையத்தை அதிகரித்து மக்கள் அதிக அளவு பயன்படுத்த துவங்கினால் தமிழகத்தில் மாசுக்களை குறைக்க முடியும்.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தில் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டு
வருகிறது. மக்களுக்கு மருத்துவ தேவை அதிகம் உள்ள இடத்தில் ESI மருத்துவமனைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
சிலிண்டர் விலை அதிகரித்து வருவது தொடர்பாக கேள்வி எழுப்புகிறீர்கள். சர்வதேச சந்தையில் விலை ஏற்றம் இறக்கம் என உள்ளது. சர்வதேச அளவில் விலை ஏற்றம் ஆனால் அதன் விளைவு இங்கேயும் அதிகரிக்க காரணமாகிறது. சிலிண்டர் மாணியத்தை பொறுத்தவரை முழுமையாக நிறுத்தவில்லை. காஷ்மீரிலும் ஒரு சில மாநிலங்களில் வழங்கப்பட்டு வருகிறது என்றார் ராமேஸ்வர் டெலி.
source https://news7tamil.live/why-the-increase-in-gas-cylinder-price-union-ministers-answer.html





