23 9 2022

பாப்புலர் பிரண்ட் அலுவலகத்தில் சோதனை, கைது கண்டனத்துக்குரியது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் சிறுபான்மை வெறுப்புணர்வின் பிரதிபலிப்பாகவே இந்த தீய நடவடிக்கைகள் அமைந்துள்ளதாக கூறினார்.
குறிப்பாக மதுரையில் ஒரு பெண் நிர்வாகியின் இல்லத்திற்கு சென்று அத்துமீறலில் ஈடுபட்ட ஒன்றிய அரசின் ஏவலாளிகளின் நடவடிக்கைகள் உச்ச பட்ச மனித உரிமை மீறல் என கூறி கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பி எஃப் ஐ அமைப்பின் அலுவலகம் மற்றும் நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். மேலும் நாடு முழுவதும் இந்த சோதனை நடைபெற்றது.
நாடு முழுவதிலிருந்தும் உள்ள 45 பி எஃப் ஐ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து 11 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்திலிருந்து கைது செய்யப்பட்ட நிர்வாகிகளின் பெயர்கள் பின்வருமாறு : எம் மொஹமத் அலி ஜின்னா, மொஹமத் யூசிப், ஏ எஸ் இஸ்மயில் , சயித் இஸ்ஷ்க், காலித் மொஹமத், அஹமத் இத்ரிஸ், மொஹமத் அபுதாஹிர், காஜா மொய்தீன், யாசர் அர்ஃபத், பரக்துல்லா, பயஸ் அஹமத்.
இதில் 5 பேர் மதுரையையும், 2 பேர் கேரளாவையும், கூடலூர், ராமநாதபுரம், தேனி, கோவையை சேர்ந்தவர்கள். இந்தியா முழுவதிலும் உள்ள 15 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதிகபட்சமாக கேரளவில்19பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை பி எஃப் ஐ அமைப்பின் மீது 19வழக்குகளை என்ஐஏ பதிவு செய்துள்ளது குறிப்பிடதக்கது.
source https://tamil.indianexpress.com/tamilnadu/manithaneya-makkal-katchi-on-pfi-arrest-by-nia-514906/