திங்கள், 26 செப்டம்பர், 2022

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

 25 09 2022

தமிழகத்தில் இன்று மீண்டும் 538 பேருக்கு புதிய கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகளின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 110 பேர், செங்கல்பட்டில் 51 பேர் உள்பட 34 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. மருத்துவமனையில் 446 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. கொரோனா பாதிப்புக்குள்ளாகி 5 ஆயிரத்து 395 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

 


source https://news7tamil.live/corona-infection-is-increasing-again-in-tamil-nadu.html

Related Posts: