வியாழன், 29 செப்டம்பர், 2022

மீண்டும் வரலாறு காணாத வீழ்ச்சியடைந்த இந்திய ரூபாய் மதிப்பு

 

28 09 2022

சர்வதேச பங்குச்சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் இன்று வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியைடந்துள்ளது.

மும்பை சர்வதே பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதல் இந்திய ரூபாயின் மதிப்பு 40 காசுகள் குறைந்தது. வர்த்தகத்தின் தொடக்கத்தில் நிஃப்டி 16,870.55 புள்ளிகளில் சிவப்பு நிறத்தில் தொடங்கியது. பின்னர் நிப்டி 16,820.40 புள்ளிகளாக குறைந்தது. நிஃப்டி அதிகபட்சமாக 17,037.60 புள்ளிகள் வரை உயர்ந்தது. வர்த்தகத்தின் இறுதியில் இந்திய ரூபாய் மதிப்பு 81.90 காசாக குறைந்தது.

மும்பை பங்குச்சந்தை இன்று சரிவுடனே நிறைவடைந்துள்ளது அதன்படி மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 509.24 புள்ளிகள் சரிந்து 56,598.28 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 148.80 புள்ளிகள் சரிந்து 16,858.60 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

வெளிநாட்டு சந்தைகளில் டாலரின் மதிப்பு வலுவாக இருப்பதாலும், முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டதாலும் இந்திய ரூபாய் மதிதப்பு சரிந்ததாக கூறப்படுகிறது.

இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் கிழமையும் சர்வதேச பங்குசந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. நேற்றைய தினம் ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து வர்த்தகமாகி 81.53 காசுகள் என்ற அளவில் வர்த்தகம் நிறைவடைந்தது.

source https://news7tamil.live/the-value-of-the-indian-rupee-has-again-fallen-to-a-record-low-today.html