வெள்ளி, 30 செப்டம்பர், 2022

திருமணமான, திருமணம் ஆகாத அனைத்து பெண்களுக்கும் பாதுகாப்பான சட்டப்பூர்வ கருக்கலைப்பு உரிமை – சுப்ரீம் கோர்ட்

 29 09 2022 உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு 1971-ஆம் ஆண்டு சட்டம் திருமணமான பெண்களைப் பற்றியது, 2021 திருத்தத்திற்கான விஷயங்கள் மற்றும் காரணங்களின் அறிக்கை திருமணம் ஆனவர்களுக்கும் திருமணம் ஆகாதவர்களுக்கும் இடையில் வேறுபடுவதில்லை, எனவே, பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ கருக்கலைப்புக்கு அனைத்துப் பெண்களுக்கும உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளார்.

நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் தனிச்சிறப்பு மற்றும் ஒவ்வொருவருக்கும் சூழ்நிலைகள் மாறுபடலாம் மற்றும் பல்வேறு பொருளாதார, கலாச்சார அல்லது சமூக காரணிகள் இதில் பங்கு வகிக்கின்றன.

1971 ஆம் ஆண்டு மருத்துவக் கருக்கலைப்பு சட்டத்தின் (எம்.டி.பி) கீழ் திருமணமான பெண்களுக்குக் கருவைக் கலைப்பதற்கு இருக்கும் உரிமை திருமணம் ஆகாத பெண்களுக்கும் உண்டு என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு 1971-ஆம் ஆண்டு சட்டம் திருமணமான பெண்களைப் பற்றியது, 2021 திருத்தத்திற்கான விஷயங்கள் மற்றும் காரணங்களின் அறிக்கை திருமணம் ஆனவர்களுக்கும் திருமணம் ஆகாதவர்களுக்கும் இடையில் வேறுபடுவதில்லை, எனவே, பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ கருக்கலைப்புக்கு அனைத்துப் பெண்களுக்கும உரிமை உள்ளது என்று தீர்ப்பளித்துள்ளார்.

திருமணமான பெண்களுக்கும் திருமணமாகாத பெண்களுக்கும் இடையிலான செயற்கையாக உள்ள வேறுபாட்டை தொடர முடியாது என்றும், இந்த உரிமைகளை சுதந்திரமாகப் பயன்படுத்த பெண்களுக்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்றும் இந்த அமர்வு கூறியது.

இனப்பெருக்க உரிமையை வலியுறுத்துவது உடல் ரீதியான சுதந்திரத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ள நிலையில், கருத்தடை தேர்வு உரிமை, குழந்தைகளின் எண்ணிக்கை மற்றும் கருக்கலைப்பு செய்யலாமா வேண்டாமா என்பதை சமூக காரணிகளின் செல்வாக்கு இல்லாமல் எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஒரு பெண்ணுக்கு தேவையற்ற கர்ப்பத்தினால் ஏற்படும் விளைவுகளை குறைத்து மதிப்பிட முடியாது. அது கருவின் ஆரோக்கியம் தாயின் மன நலனைப் பொறுத்தது. எம்.டி.பி சட்டத்தின் விளக்கம் சமூக யதார்த்தங்களைப் பிரதிபலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது.

பாதுகாப்பற்ற கருக்கலைப்புகள் குறித்த நாடாளுமன்ற விவாதப் புள்ளி விவரங்கள், 67 சதவீத கருக்கலைப்புகள் பாதுகாப்பற்றவை என்று பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலின் குளோபல் ஹெல்த் ஸ்டடியை நீதிபதிகள் அமர்வு குறிப்பிட்டது. பாதுகாப்பான கருக்கலைப்புக்கான அணுகலை மறுப்பது பாதுகாப்பற்ற கருக்கலைப்புகளை நாடுவதை அதிகரிக்கும் என்றும் அது கூறியது.

பாலியல் பலாத்காரம் மற்றும் கற்பழிப்பு ஆகியவற்றில் தப்பிப்பிழைத்தவர்களில் திருமணமான பெண்களும் இருக்கலாம் என்று நீதிமன்றம் கூறியது. ஏனெனில், ஒரு பெண்ணின் சம்மதம் இல்லாமல் கணவரின் செயலால் கர்ப்பமாக வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளது.

இந்தச் சூழலில், பாலியல் பலாத்காரம் என்பது எம்.டி.பி சட்டம் மற்றும் அதன் விதிகளின் அர்த்தத்தில் மட்டுமே திருமண பலாத்காரம் என்ற பொருளை உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. எம்.டி.பி சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்சோ) சட்டம் ஆகியவை இணைத்துப் பார்க்க வேண்டும் என்றும், எம்.டி.பி சட்டத்தின் கீழ் சிறார்களின் அடையாளத்தை வெளியிட வேண்டிய அவசியமில்லை என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

source https://tamil.indianexpress.com/india/all-women-married-or-unmarried-have-right-to-safe-and-legal-abortion-supreme-court-order-518239/