இன்ஸ்டாகிராம் ஆப்பில் ‘Not interested’ பட்டன் எக்ஸ்ப்ளோர் பிரிவில் (Explore section) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. குறிப்பிட்ட போஸ்ட்களை பார்க்க விருப்பமில்லையென்றால் ‘Not interested’ பட்டன் கொடுக்கலாம். அதுமட்டுமல்லாது அந்த வகையான போஸ்ட் வருங்காலத்தில் உங்களுக்கு காண்பிக்காதபடி மாற்றியமைக்கப்படும்.
அதோடு சில வசதிகளையும் அறிமுகப்படுத்துகிறது. போஸ்ட்களை 30 நாட்கள் வரை snooze செய்து வைக்கும் வசதியையும் கொண்டுவருகிறது. பயனர்கள் அந்த போஸ்ட்டில் உள்ள X icon கிளிக் செய்து Timeline டைம்லைனிலிருந்தும் மறைத்து வைக்கலாம்.

போஸ்ட் கீவேர்டு, இமோஜி, ஹேஷ்டேக், கேப்ஷன் என பலவற்றில் புது அம்சங்களை கொண்டு வரவுள்ளது. பயனர்களின் தேவைகேற்ற வகையில் அம்சங்களை அறிமுகப்படுத்த உள்ளது. பயனர்கள் தங்கள் விருப்பதிற்கு ஏற்ப போஸ்ட்களை பார்க்கும் வகையில் ஆப்ஷன் கொண்டு வரப்பட உள்ளது.
பயனர்களின் விருப்பம் போல் சில அம்சங்கள் மாற்றியமைக்கப்பட உள்ளது. நிறைய பயனர்களை கவரும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இன்ஸ்டாகிராம் அண்மையில் ரீல்ஸ் வசதியில் அப்டேட் செய்தது. அதோடு வீடியோ முழுதிரையில் பதிவேற்றம் செய்வது போல் போட்டோவும் முழுதிரையில் அதிக குவாலிட்டியுடன் பதிவேற்றம் செய்யும் வசதியை கொண்டு வந்தது.