டிரம்ப் எடுக்கும் எந்தவொரு முயற்சியும் தோல்வியில்தான் முடியும் - ஈரான் 13 04 2026
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதேபோல், அந்நாட்டின் முக்கிய தலைவர்களும், தளபதிகளும் மரணமடைந்துள்ளனர். மேலும் 2,875 ஆண்கள் மற்றும் ஏறத்தாழ 500 பெண்கள் உட்பட 3,375 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்க படைத் தளங்கள் உள்ள நாடுகள் மீது ஈரான் தொடர் தாக்குதலை நடத்தியது. கச்சா எண்ணெய், எரிவாயு கடந்து முக்கிய கடல் வழி வர்த்தகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மூடியது. இதனால், எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தும், இந்தியா உட்பட பல நாடுகளில் தட்டுப்பாடும் நிலவி வருகிறது.
ஒருபுறம் பாகிஸ்தானில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தாலும், மறுபுறம் ஈரானுக்கு நேரடியாக மிரட்டல் விடுக்கும் தொனியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசி வருகிறார். குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை முற்றுகையிட அமெரிக்க படை விரைந்துள்ளது. இது பற்றி டிரம்ப் பேசுகையில், 'பாகிஸ்தானில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டாலும், எட்டப்படவில்லை என்றாலும், ஈரான் கடல்வழிப் பாதையை முற்றுகையிட அமெரிக்கா தயாராகி வருகிறது" என்று அவர் கூறியிருக்கிறார்.
அமெரிக்க ராணுவம், காலை 10:00 மணி (ஜிஎம்டி 14:00 மணி) முதல் ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் கப்பல்களைத் தடுக்கத் தொடங்க உள்ளது. இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மற்ற இடங்களுக்குச் செல்லும் கப்பல்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படாது என்றும் அது வலியுறுத்தப்பட்டுள்ளது. டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தள பதிவில், இந்த வழியைப் பயன்படுத்த முயற்சிக்கும் "எந்தவொரு மற்றும் அனைத்துக் கப்பல்களையும்" அமெரிக்கக் கடற்படை முற்றுகையிடும் என்று அறிவித்தார். அதே நேரத்தில், சர்வதேச கடல் பகுதிகளில் பரந்த அளவிலான தடைகள் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
source https://tamil.indianexpress.com/international/iran-war-live-updates-us-military-block-iranian-port-traffic-hormuz-strait-donald-trump-ceasefire-talk-tamil-news-11720485





