செவ்வாய், 21 ஏப்ரல், 2026

தமிழகம், புதுச்சேரியில் ஏப்ரல் 22 வரை வெயில் அதிகரிக்கும்; வீட்டை விட்டு வெளியே வராதீங்க- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

 sasa

Heatwave Alert India | Tamil Nadu Weather High Temperature Warning | IMD Weather Update

இந்தியாவின் வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு மாநிலங்களில் அடுத்த 4 முதல் 5 நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி ஏப்ரல் 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை வடமேற்கு, மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் பல பகுதிகளில் கடும் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஹரியானா, சண்டிகார், டெல்லி, பஞ்சாப், கிழக்கு ராஜஸ்தான், விதர்பா, சத்தீஷ்கார், மேற்கு உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா, கிழக்கு உத்தரபிரதேசத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் ஆங்காங்கே வெப்ப அலை வீசும்.

மேற்கு வங்காளத்தில் கங்கைக்கரையோரம் ஒட்டிய பகுதிகளில் சில இடங்களில் 26-ந் தேதிவரை வெப்பமும், ஈரப்பதமான வானிலையும் நிலவும்.

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் 22-ந் தேதிவரை அதிக வெப்பநிலையும், ஈரப்பதமான வானிலையும் நிலவும்.

கேரளம், மாஹே, கடலோர ஆந்திரா, ஏனாம் ஆகிய பகுதிகளில் 24-ந் தேதிவரையும், குஜராத் கடலோர பகுதிகளில் 24 மற்றும் 25-ந் தேதிகளிலும் அதிக வெப்பநிலையும், ஈரப்பதமான வானிலையும் நிலவும். ஹரியானா, சண்டிகார், மேற்கு உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், விதர்பா ஆகிய பகுதிகளில் 20 மற்றும் 21-ந் தேதிகளில் இரவு நேர வெப்பநிலை அதிகமாக இருக்கும்.

வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் (மதியம் 12 மணி முதல் 3 மணி வரை) தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்கவும். அதிகப்படியான நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.



source https://tamil.indianexpress.com/tamilnadu/heatwave-alert-india-tamil-nadu-weather-high-temperature-warning-imd-weather-update-11748277