தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு நடைபெறும் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களிடம், பாதுகாப்புப் பணியில் இருந்த துணை ஆணையர் ஸ்ரீருஷ்டிசிங் முறையற்ற வகையில் நடந்துகொண்டது தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசிய திருச்சி தெற்கு காவல்துறை துணை ஆணையருக்கு திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறது.தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்த நிலையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளரை திருச்சி தெற்கு காவல்துறை துணை ஆணையர் ஸ்ரீருஷ்டிசிங் அநாகரிமாக நடந்து கொண்டதோடு ஒருமையில் பேசியது வன்மையான கண்டனத்திற்குரியது.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/04/25/tricny-press-club-2026-04-25-02-01-30.jpeg)
காவல்துறை துணை ஆணையராக பணியாற்றக் கூடியவர் உயர் பதவியில் உள்ளவர் இப்படி பொறுப்பற்ற தனமாக நடந்து கொள்வது முறையானது அல்ல. பத்திரிகையாளர்களை தரக்குறைவாக நடத்தியதற்கு தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட காவல்துறை துணை ஆணையர் மீது தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் கேட்டுக் கொள்கிறது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசி அவமதித்த காவல் துணை ஆணையர், தனது செயலுக்குத் தார்மீக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திருச்சி டிஸ்ட்ரிக்ட் பிரஸ் & மீடியா கிளப் கோரியுள்ளது. மேலும், தேர்தல் நேரத்தில் உயர் பதவியில் இருப்பவர்கள் பொறுப்புடன் செயல்படத் தவறுவது கண்டிக்கத்தக்கது என்றும், இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஊடக அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
செய்தி: க.சண்முகவடிவேல்
source https://tamil.indianexpress.com/tamilnadu/trichy-press-club-condemns-trichy-south-police-dc-for-ill-treating-journalists-tn-assembly-election-11763399





