அமெரிக்காவில் வாஷிங்டன் ஹில்டன் ஹோட்டலில் சனிக்கிழமை, வெள்ளை மாளிகை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் இரவு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது, திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அந்த நேரத்தில் மேடையில் இருந்த அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோரை சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றின
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர். அடையாளம் காணப்பட்ட நபர் 31 வயதான கோல் தாமஸ் ஆலன் எனவும் அவர் விருந்து அரங்குக்குள் நுழைவதற்கு முன்பே தடுத்து நிறுத்தப்பட்டதாக சட்ட அமலாக்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் டிரம்பை ஒரு பாலியல் குற்றவாளி என்றும் குழந்தை பாலியல் குற்றவாளி என்றும் ஒரு வாசகத்தை எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. அது குறித்து '60 மினிட்ஸ்' நேர்காணலின் போது டிரம்பிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது "நீங்கள் அதை வாசிப்பீர்கள் என்று நான் காத்துக் கொண்டிருந்தேன். ஆம், அவர் அப்படி எழுதியிருந்தார்.
நான் ஒன்றும் பாலியல் குற்றவாளி கிடையாது. நான் அந்த அறிக்கையைப் படித்தேன். உங்களுக்குத் தெரியும், அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்ட நபர். நீங்கள் அதை வாசித்திருக்கக் கூடாது” என்றார். மேலும், இந்தச் சம்பவத்தின் போது தான் பதற்றமடையவில்லை என்று கூறிய டிரம்ப், தனது நடவடிக்கைகள் பாதுகாப்பு அதிகாரிகளின் வேகத்தைக் குறைத்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டார்.
source https://tamil.indianexpress.com/international/i-am-not-a-pedophile-trump-snaps-at-reporter-over-shooter-manifesto-11769403
அமெரிக்க அரசு தலைமை வழக்கறிஞர் டாட் பிளான்ச்-ன் கூற்றுப்படி, சந்தேகிக்கப்படும் நபர் நிர்வாகத்தின் உறுப்பினர்களை இலக்கு வைத்திருக்கலாம் என்று ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த நபர் எழுதியதாகக் கூறப்படும் அறிக்கைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.





