நேற்று கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் அண்மையில் கர்நாடகாவில் திப்புவை வைத்து சங்க பரிவார்கள் நடத்திய கலவரத்தை பற்றிய செய்தித் தொகுப்பை காட்டினார்கள்.
திப்புவின் தியாகத்தையும் வீரத்தையும் போற்றியும் அதை மறைக்க முயலும் பாசிஸ்டுகளை கடுமையாக கண்டித்தும் போற்றத் தக்க முறையில் அந்தத் தொகுப்பு அமைந்தது.
மற்ற தொலைக்காட்சிகள் வெறியர்களை அழைத்து வந்து இந்த சாக்கில் திப்புவை மேலும் களங்கப் படுத்திய போது,கலைஞர் தொலைக்காட்சி அதற்கு எந்த இடமும் கொடுக்காமல் சமரசமின்றி நியாயத்தின் பக்கம் நின்றது.
நியாய உணர்வுடன் இப்படிப்பட்ட செய்திகளை கலைஞர் செய்திகள் அளிப்பது இது முதல் முறையல்ல. நெஞ்சார்ந்த நன்றி கலைஞர் தொலைக்காட்சிக்கு.
- mohamed faize