வியாழன், 17 மார்ச், 2016

சாதி = சதி

தனது சாதிக்காரன் சாராயம் குடித்துவிட்டு நடுரோட்டில் அரை நிர்வாணமாக படுத்துக் கிடக்கும் போது துடிக்காத சாதி….
வாங்கிய கடனை திருப்பிக்கட்ட முடியாது கந்து வட்டிக்காரன் கேவலமாக திட்டும்போது எட்டிபார்க்காத சாதி...
தனது சாதிப்பெண் வரதட்சணை கொடுமையால் வாழாவெட்டியாகும்போதோ, தற்கொலை செய்யும் போதோ துடிக்காத சாதி…
தனது சாதிக்காரன் வேலை வெட்டியில்லாமல் ஊரில் சுற்றும்போது துடிக்காத சாதி…
தனது சாதிக்காரன் கல்வி பயில முடியாமல் முறுக்கு விற்க கிளம்பும்போது துடிக்காத சாதி….
தனது சாதிக்காரன் நிலத்தில் கெயில் எரிவாயுக் குழாய் பதிக்கும் போது துடிக்காத சாதி…
தனது சாதிக்காரன் நிலத்தில் பெப்ஸி கம்பெனி நீரை உறிஞ்சும் போது துடிக்காத சாதி….
தனது சாதிக்காரன் ஊரில் நியூட்ரினோ, அணு உலை என்று அபாயங்கள் வரும் போது துடிக்காத சாதி…
காதல் என்றதும் துடிப்பது எப்படி..?
இப்படிக்கு
தனி ஒருவன்.....
Anonymous forward message
muthu krishnan