செவ்வாய், 15 மார்ச், 2016

​எந்த கட்சியை சேர்ந்தவர் திருவள்ளுவர் ? சாக்கு போட்டு சிலையை மூடிய அரசு ஊழியர்கள் !


newfbpost-valluvarசேலத்தில் தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டி, திருவள்ளுவர் சிலையையும் சாக்கைப்போட்டு அரசு ஊழியர்கள் மூடியுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் மே 16ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடந்த 4ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து அரசியல் கட்சியினரின் சுவர் விளம்பரங்கள், கொடி கம்பங்கள், பேனர்கள் உள்ளிட்டவை அகற்றப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், சேலத்தில் சிலைகளை மூடவேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி உத்தரவிட்டதை தொடர்ந்து பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள திருவள்ளுவர் சிலையையும் ஊழியர்கள் மூடிவிட்டனர்.

இதற்கு பொதுமக்களும், தமிழ் ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 
இதை தொடர்ந்து நியூஸ்7 தமிழ், தேர்தல் அதிகாரி விஜய்பாபுவை தொடர்பு கொண்டபோது, ஊழியர்கள் ஆர்வ மிகுதியால் திருவள்ளுவர் சிலையை மூடி விட்டதாகவும், இது குறித்து கவனத்திற்கு கொண்டு வரப்பட்டவுடன் உடனடியாக அகற்றிவிட்டதாகவும் தெரிவித்தார்.