தேர்தல் நடவடிக்கைகள் முடிவடையும் வரை செயல்படும் வகையில், தமிழகம் முழுவதும் 363 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன.
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பை ஊக்குவித்து 100 சதவீத வாக்குப் பதிவை இலக்காகக் கொண்டு தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டுவருகிறது.
இந்த நிலையில், சென்னை, கோவை உள்ளிட்ட மாநகராட்சிகளின் மண்டல அலுவலகங்கள், பிற மாவட்டங்களில் வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்கள் உள்ளிட்ட 363 இடங்களில் வாக்காளர் சேவை மையங்கள் திங்கள்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியது:-
தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கென ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதிக்கும் தலா 5 பிரிவு எழுத்தர்கள் உள்ளன. ஆண்டு முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் இவர்களே சேவை மையங்களில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். வாக்காளர்களிடம் இருந்து பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்டவை தொடர்பான விண்ணப்பங்களை அளிப்பர். பூர்த்தி செய்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பர்.
சேவை மைய நேரம்: சேவை மையங்கள் அரசு வேலை நாள்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை இயங்கும். கடவுச்சீட்டு அளவிலான 3 புகைப்படங்களை வாக்காளர்கள் கொண்டு செல்ல வேண்டும். பெயர் சேர்க்க, வாக்காளர் அடையாள அட்டை பெறுதல் போன்ற பணிகளுக்கு இந்தப் புகைப்படங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இருப்பிடச் சான்றாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றை அளிக்கலாம். இந்த மையம் சனிக்கிழமையும் இயங்கும். ஆனால், ஞாயிற்றுக்கிழமைகளில் செயல்படாது.
துணை வாக்காளர் பட்டியலில் பெயர்கள் சேர்ப்பு: ஏப்ரல் 15-ஆம் தேதி வரை இதுபோன்று விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து அளிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 20-இல் வெளியிடப்பட்டது.
அதற்குப் பிறகு சேர்க்கப்படும் பெயர்கள் அனைத்தும் துணை வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படும். இந்தப் பட்டியல் வாக்குப் பதிவுக்கு முன்பாக வெளியிடப்படும் என்றனர்.