அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் டேனியல் நி பிரீட்மான் (Daniel G.Freeman) என்பவர் தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (Reproductive Value) பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார்.
இதை நிரூபிக்க, அவரும் அவரின் மாணவர்களும் ஒரு குறிப்பிட்ட சில இளங்கலை மாணவர்களிடம், தாடி வைப்பதால் அவர்களுக்கு என்னென்ன உணர்வுகள் ஏற்படுகின்றன என்பதைப் பற்றி பிரிண்ட் செய்யப்பட்ட கேள்வி மூலமாகவும் மற்றும் நேர்காணல் மூலமாகவும் ஆய்வு செய்தார்.
ஆய்வு செய்யும் ஒரு மாணவர், பல மாணவிகளிடம் "தாடி வைத்த ஆண்களைப்பற்றி என்ன உணர்கின்றீர்கள்" என்று நேர்காணல் எடுத்தார். அனேகமாக எல்லா மாணவிகளும், தாடியுடன் உள்ள ஆண்களின் முகம், முழுவதுமாக சவரம் செய்யப்பட்ட ஆண்களின் முகத்தைக் காட்டிலும் அதிக ஆண்மைத்தனம், முதிர்ச்சித்தன்மை, சுதந்திர உணர்வு கொண்டதாக இருப்பதாக தெரிவித்து இருந்தனர்.
இறுதியாக இந்த ஆய்வு "தாடி, ஒரு பாலியல் காந்த விசையாகவும், ஆண்களை அதிகம் கவர்ச்சியாகவும், பெண்களுக்கு ஓர் ஈர்க்கின்ற விதமாகவும் இருப்பதாகத் தீர்மானிக்கிறது. (they concluded from their studies that beard increases “sexual magnetism” and attractiveness and makes men more appealing to women.)
(பெண்களின் கூந்தல் பாலியல் உறவுக்கு எந்த வகையிலும் சம்மந்தமில்லாமல் இருந்தபோதும் எப்படி ஆண்களை ஈர்ப்பதாக உள்ளதோ அது போல் தாடி பெண்களை ஈர்க்கிறது என்பது இதன் கருத்தாகும்.)
கலிபோர்னியா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் உளவியலாளர் ராபர்ட் ஜே.பெல்லிக்ரிணி என்பவர் 1973ஆம் ஆண்டு உளவியல் பத்திரிகையில் ஒரு ஆராய்ச்சி முடிவை வெளியிட்டார். இந்த ஆய்வுக்காக அவர், 22 வயது முதல் 25 வயது வரையிலான தங்கள் தாடியை முழுவதுமாக சவரம் செய்ய விருப்பமுள்ள எட்டுப் பேரை தேர்ந்தெடுத்தார். அவர்கள் அனைவரும் கீழ்க்கண்ட நான்கு நிலைகளில் புகைப்படம் எடுக்கப்பட்டனர்.