வியாழன், 17 மார்ச், 2016

கொத்தடிமைகளிடம் மனித உரிமை ஆணையம் விசாரணை


news_324_877_Evereadyபுதுவையில் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாகப் புகார் அளித்தவர்களிடம் தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் இன்று (மார்ச் 17) விசாரணை நடத்தினர்.
புதுவை செல்லிப்பட்டு பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் அதேப் பகுதியை சேர்ந்த 10 பேர் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதாக புகார் எழுந்தது.
இது குறித்து வருவாய் துறை மற்றும் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கொத்தடிமகள் குறித்து தேசிய மனித உரிமை ஆணைய அதிகாரிகள் புதுவை காவல்துறை தலைமை அலுவலக வளாகத்தில் பாதிக்கப்பட்டோரிடம் இன்று விசாரணை நடத்தினர். அப்போது வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரும் உடனிருந்தனர்.
இந்த விசாரணை தொடர்ந்து 3 நாள்கள் நடத்தப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன