RSS ஃபாஸிச பள்ளிக் கூடங்கள் வெற்றியா தோல்வியா ?
***************************************************************************
1.ஒரு காலத்தில் இஸ்லாம் ,கம்யூனிசம் , மார்க்ஸிசம், முதலாளித்துவம், திராவிடம், நாத்திகம், பாசிசம் , நாசிசம் ,இன மொழி மற்றும் மதம் சார்ந்த அரசியல் சிந்தனைப் பரவலாக்கத்தில் மேடைகளும், வீதிப் பேச்சுகளும் மட்டுமே முக்கிய பங்குகள் வகித்தன .

2.ஆனால் மோடி இந்தியாவில் ஹிந்துத்வா இயக்கங்கள் தங்களுடைய ஹிந்து தேசியவாத சிந்தனையை பரப்பும் வகையிலும் ,அகன்ற பாரதத்தை எதிர்ப்பவரை ஒடுக்குவதற்காகவும் கைகளில் எடுத்த திட்டங்களில் மிகக் கூர்மையான ஆயுதம் பாடசாலைகளை உருவாக்கும் வித்யாலாயா ப்ராஜெக்ட் ஆகும்.
விபரீதமான வித்யாலயா ப்ராஜெக்ட்:
*******************************************************
1.சிசு மந்திர் சேவா பாரதி ,வித்யா பாரதி ,வன்வாசி கல்யாண் ஆஸ்ரம்,பாரத் கல்யாண் பிரதிஷ்தான் ,பாரதீய ஜனசேவா சன்ஸ்தான் என்ற கல்வி அமைப்புக்களின் தலைமை சங்பரிவார் அமைப்புகளுடன் இணைந்து தங்கள் திட்டங்களை வலுப்படுத்தும் செயல்பாட்டில் இறங்கி உள்ளனர் .

2.2017 ஆம் ஆண்டு முடிவதற்குள் இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் பள்ளிக்கூடங்கள் உருவாக்கியே தீர வேண்டும் என்பது சங்க பரிவார் அமைப்பின் செயல் திட்டமாக உள்ளது .
.
3.கான்வென்ட் மற்றும் கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களை முறியடிக்கும் வகையில் ஹிந்துத்வா சிந்தனை போதிக்கும்
பாடசாலைகளை உருவாக்குவதே நோக்கமாக உள்ளது .
.
3.கான்வென்ட் மற்றும் கிறிஸ்துவ பள்ளிக்கூடங்களை முறியடிக்கும் வகையில் ஹிந்துத்வா சிந்தனை போதிக்கும்
பாடசாலைகளை உருவாக்குவதே நோக்கமாக உள்ளது .
4.ஜனவரி மாதம்அன்று டெல்லி நகரத்தில் நடத்திய நிகழ்ச்சியில் மிஷனரிகள் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் விட
வித்யாலாயா ப்ராஜெக்ட் பள்ளிக்கூடங்கள் அதிக எண்ணிக்கையை உருவாக்குதல் குறித்து பேசப்பட்டது
வித்யாலாயா ப்ராஜெக்ட் பள்ளிக்கூடங்கள் அதிக எண்ணிக்கையை உருவாக்குதல் குறித்து பேசப்பட்டது
5.இந்தியாவில் தற்போது தங்களின் பாரம்பரிய ஹிந்து சிந்தனைகளை பேணிக் காப்பாற்றுவதற்க்காக
40000 பள்ளிக்கூடங்களை வித்யா பாரதி சன்ஸ்தான் நடத்து கின்றது . இதில் மற்றும் 40 லட்சம் மாணவர்கள்
கல்வி பயிலுகின்றார்கள்.
40000 பள்ளிக்கூடங்களை வித்யா பாரதி சன்ஸ்தான் நடத்து கின்றது . இதில் மற்றும் 40 லட்சம் மாணவர்கள்
கல்வி பயிலுகின்றார்கள்.
6.மேற்கத்திய கல்விமுறையை எதிர்ப்பதற்காக இந்தியாவில் 7 லட்சம் குருகுலக் கல்விமுறை மற்றும் பள்ளிக்கூடங்கள் உருவாக்க பாபா ராம் தேவ் போன்றோர்
உதவி புரிவதற்கு தயாராக உள்ளனர் .
உதவி புரிவதற்கு தயாராக உள்ளனர் .
7.ஹிந்துத்வா அமைப்புகளால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களுக்கு தங்கள் குழந்தைகளை பாடம் கற்றுக்கொள்ள கட்டாயம் அனுப்ப வேண்டும். மாறாக மிஷனரிகளால் நடத்தப்படும் கல்விசாலைகளுக்கு அனுப்பக்கூடாது என்ற விழிப்புணர்வை ஊட்டும் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன .
8.ஆர் எஸ் எஸ் அமைப்பில் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட 1 லட்சம் வாலிபர்கள் கிராமத்து பள்ளிக்கூடங்கள் மற்றும் பிரசார உத்திகளுக்கு பயன்படுத்தப் படுகின்றார்கள் . மேலும் 3 மாதங்கள் பாடம் கற்பித்தல் தொடர்பான பயற்சி முறைகளில் ஈடுபடுத்தப் படுகின்றார்கள். பிறகு 10 நாட்கள் பயிற்சி தரப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது .
வேகமாக வளர்க்கும் பள்ளிக்கூடங்கள் :
****************************************************************
1.இந்தியாவில் உத்திர பிரதேச மாநிலத்தில் இது போன்ற பள்ளிக்கூடங்களை உருவாக்க ஆர் எஸ் எஸ் முனைகின்றது
****************************************************************
1.இந்தியாவில் உத்திர பிரதேச மாநிலத்தில் இது போன்ற பள்ளிக்கூடங்களை உருவாக்க ஆர் எஸ் எஸ் முனைகின்றது
2.ஜார்கண்ட் ,பீகார், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் பள்ளிக்கூடங்கள் வளர்ச்சியைப் பெற்றுள்ளன .
3.ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் அங்கே உள்ள எம் எல் ஏக்கள் துணை கொண்டு
சிறந்த வளர்ச்சியை ஆர் எஸ் எஸ் பள்ளிக்கூடங்கள் அடைந்துள்ளன .
சிறந்த வளர்ச்சியை ஆர் எஸ் எஸ் பள்ளிக்கூடங்கள் அடைந்துள்ளன .
4.அதே வேளையில் பெங்களுர் , ஹைதராபாத் , கொல்கட்டா நகரங்களில் ஆர் எஸ் எஸ் பள்ளிக்கூடங்களுக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை
5.இன்று உங்கள் குழந்தைகள் ஆங்கிலம் பேசலாம் , ஆனால் நாளை அவர்கள் உங்களை தனியாக விட்டு விட்டு சென்று விடுவார்கள்.மேலும் எங்கள் கல்விமுறையே சிறந்த குடும்ப ரீதியான பண்பாடுகள் மற்றும் பாரம்பரியத்தை ஊட்டி உருவாக்கும் .
6.எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் மட்டும் படித்தவர்கள் என்ற நிலையை அடையமுடியாது .மாறாக தங்கள் நாட்டின் மீதான அபரிவிதமான தேசப்பற்று மற்றும் எது சரி எது தவறு என்பதை அறிந்து கொள்ளும் வகையில் பாடம் புகட்டப்படுகின்றது என்று வித்யா பராதி அகில் பாரதிய சிக்சன் சன்ஸ்தான் என்ற அமைப்பின் தலைவர் ரமேந்த்ரா ராய் விழாவில் விசமக் கருத்துக்களை முன்வைத்தார் .
உரத்த சிந்தனை :
*****************************
1.இன்றைய இந்தியாவில் பலதரப்பட்ட நாகரீகங்களையும் ,பண்பாட்டின் முகவரிகளையும் அவற்றைப் பின்பற்றும் மக்களிடம் அன்றாக பார்க்கலாம். இந்த நாகரீகம் மற்றும் பண்பாட்டின் பிறப்பிடத்திற்கு காரணம் பின்பற்றும் மக்களின் சிந்தனைகள் ஆகும் .

2.இந்த சிந்தனைகள் வாழ்வியல் கோலோச்சியதை தாண்டி அரசியல் மற்றும் தேசியத்தில் கோலோச்சு வதற்கு
போட்டிப் போடுவதைப் பார்க்க முடிகின்றது .
போட்டிப் போடுவதைப் பார்க்க முடிகின்றது .
3.தற்போது உலகில் அனைத்து சிந்தனைகளையும் ஓரங்கட்டி விட்டு உலக அரசியலில் பாசிச சிந்தனை தனக்கு என்ற தனி பாதையை உருவாக்க முனைகின்றது . அதற்கு சரியான பாசிச சிந்தனையாளர்களை தயாரிக்க பள்ளிக்கூடம் என்ற ஆலையை நிர்மாணிக்கின்றது .
4.இந்த பாஸிச பள்ளிக்கூட ஆலையில் வெளிவரும் மருத்துவர், வழக்கறிஞர், பத்திரிக்கையாளர், காவல்துறை அதிகாரி ,
நீதிபதிகளால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி ஒருபோதும் கிடைக்காது.
நீதிபதிகளால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி ஒருபோதும் கிடைக்காது.
5.இந்தியாவில் முஸ்லிம்கள் ,தாழ்ந்த சாதியினர் என அழைக்கப்படும் சமூகங்கள் மற்றும் இந்திய இறையாண்மைக்கு எதிரான நச்சு சிந்தனைகளை விதைக்கும் வேளைகளில் ஆர் எஸ் எஸ் வீறு கொண்டு பயணிக்கின்றது .
6.இந்தியாவில் அனைத்து சமூக மக்களுக்கும் சீரிய சிந்தனைகளை போதித்து ,ஆரோக்கிய விடயங்களை விதைக்கும் பள்ளிக்கூடங்களை உருவாக்கவே சுதந்திரம் பெற்ற பிறகும் இந்தியாவில் நல்ல சிந்தனையாளர்கள்,ஹிந்துத்வாவிற்கு எதிராக தடுமாறுகின்றார்கள் .
7.முஸ்லிம்களால் நடத்தப்பட்ட மதரஸாக் கல்விமுறையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் படித்தது பலருக்கும் ஆச்சரியத்தை தரலாம் . ஆனால் தற்போது முஸ்லிம்கள் மதரசாக் கல்விமுறைக்கே ஆதரவு தருவது இல்லை . அதனால் இக் கல்விமுறையை தோற்க வைத்துள்ளனர் .
8.வரலாற்றில் உலகக் கல்வி எழுச்சியில் அனைத்து துறைகளிலும் முத்திரைப்பதித்த இஸ்லாமியர்கள் இந்தியாவில் சிலரைத்தவிர்த்து பெரும்பாலும் ஆரம்ப பாடசாலை நடத்தவே தவிப்பது பெரும் வேதனை ஆகும்.
9.மதசார்பற்ற மேற்கத்திய கல்விமுறை, இஸ்லாமிய பாடத்திட்டங்கள்,பாசிசக் கல்விமுறை இடையே உள்ள வேறுபாடுகளை மக்களும் ,பள்ளிக்கூடங்களை நடத்துபவரும் பலரும் உணரவில்லை .
10.புத்துணர்வோடு மாணவர்களை உருவாக்கும் பாடத்திட்டங்களை அறிமுகபடுத்தாமல் பொருளீட்டும் சுயநலவாதிகளையே இவர்களின் கல்விமுறை உருவாக்கின்றது என்ற உண்மை அறியாமல் இருக்கின்றனர் .
11.இந்தியாவில் சிறந்த அறிவு ஜீவிகள் மற்றும் சிந்தனையாளர்களை பாடசாலைகள் இல்லாமலே ஒரு காலத்தில் மாணவர் இயக்கங்கள் மூலம் இஸ்லாமியர்களால் உருவாக்க முடிந்த போது பாடசாலைகளை
கையில் எடுப்பத்து காலத்தின் அவசியம் ஆகும் .
கையில் எடுப்பத்து காலத்தின் அவசியம் ஆகும் .
12.திராவிட அரசியல் பிரமுகர்களால் கொள்ளை இலாபம் ஈட்டவே தற்போது பள்ளிக்கூடங்களும் , பொறியியல் கல்லூரிகளும் நடத்தப்படும் போது ஹிந்துத்வா இயக்கங்கள் கல்வி முயற்சியில் வெற்றி நடைபோடுவது அவர்களின் செயல்பாடு தற்காலிக வெற்றி ஆகும் .
13.அகன்ற பாரத்தை உருவாக்க லட்சம் எண்ணிக்கையில் பாஸிச பாடசாலைகளை உருவாக்கினாலும் லட்சியம் கொண்டோரின் முயற்சிகள் இருந்தால் நீதிக்கான சிந்தனையாளர்களிடம் இருந்துஇந்தியாவில் நீதியை போதிக்கும் பாடசாலைகள்
அதிகம் உருவாகும் என்றுஎன்றே எண்ணத் தோன்றுகின்றது.
அதிகம் உருவாகும் என்றுஎன்றே எண்ணத் தோன்றுகின்றது.
முயற்சி செய்வோமா ?
நன்றி :
************
கட்டுரையை வெளியிட்ட இந்நேரம் செய்திகள் குழுமத்திற்கு நன்றி
http://inneram.com/opi…/readers/7745-rss-facist-schools.html
************
கட்டுரையை வெளியிட்ட இந்நேரம் செய்திகள் குழுமத்திற்கு நன்றி
http://inneram.com/opi…/readers/7745-rss-facist-schools.html