இந்த தேசத்தின் விடுதலைக்கு வித்திட்ட போராளிகளின் வாரிசுகள் அமைதியாயிருக்க, அன்று வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசிய சங்கபரிவாரங்களின் வாரிசுகள் (பாஜக , சிவசேனை , ஆர்.எஸ்.எஸ் , இந்து முன்னணி) இன்று போலித்தனமாக தேசபக்தி வேஷம் கட்டி திரிகின்றனர்.
----------------------------------------------
----------------------------------------------
ஆங்கிலேய அரசால் மெளலானா அபுல் கலாம் ஆஸாத் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவருடைய மனைவி மரணத்தை தழுவுகிறார்கள். காலம் முழுவதும் சுக துக்கங்களில் பங்கெடுத்த தன்னுடைய துணைவியாரை உடம்பு சரியில்லாத நிலையிலேயே வீட்டில் விட்டு விட்டு சிறைச்சாலைக்கு சென்றார் ஆஸாத்.
பிறகு அந்தம்மையார் மரணமும் அடைகின்றார்கள். ஆனாலும் ஆஸாத் அவர்களால் அந்த துக்கத்தில் பங்கெடுக்க முடியவில்லை. சில ஆண்டுகள் கழித்து விடுதலையான பிறகு தம்முடைய மனைவியின் கல்லறைக்கு சென்று தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினார்.
மெளலானா ஆஸாத் சிறைச்சாலையில் இருக்கும் போது அவர்களின் சகோதரி மரணமடைகின்றார்கள். சகோதரி மரணத்திற்கும் அவர் வரமுடியவில்லை. காரணம் இந்த தேச விடுதலை மீது இருந்த வெறி. எல்லா இழப்புகளையும் ஏற்றுக் கொள்கிற சூழ்நிலைக்கு அவரை நகர்த்தியது இந்திய விடுதலையின் மீதிருந்த ஆழ்ந்த பற்று மட்டுமே.
இந்த தேசத்திற்காக பல்வேறு தியாகங்களை செய்த ஆஸாத், காந்தி, நேரு, ஆசப் அலி போன்றவர்களின் கொள்கை வாரிசுகள் அமைதியாக இருக்க, வெள்ளையனுக்கு வெண்சாமரம் வீசிய சவார்க்கரின் கொள்கை வாரிசுகள் போலித்தனமாக தேசியம் பேசி திரிகின்றனர். தேசப்பற்றை குறித்து தினம் ஒரு பாடம் எடுக்கின்றனர். எவ்வளவு கொடூர முரண் இது!!!
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ?
மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?
நூலோர்கள் செக்கடியில் நோவதுவும் காண்கிலையோ?
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமுமின்றி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி
வஞ்சரை சொல்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி