வெள்ளி, 18 மார்ச், 2016

யாரடா சொன்னது எங்களுக்கு தேச பக்தி இல்லை என்று ..?


சுதந்திர இந்திய பாராளுமன்ற வளாகத்தில் முதன்முதலில் ஒலித்த தேசபக்தி பாடலுக்கு சொந்தக்காரர்களடா நாங்கள் ..
இக்பால் அவர்களால் எழுதப்பட்ட "சாரே ஜகான் சே அச்சா, இந்துஸ்தான் ஹமாரா ஹமாரா" என்று தொடங்கும் பாடல் 1947 ஆகஸ்ட்டில் ஆங்கிலேயர் விரட்டியடிக்கப்பட்டு இந்தியாவின் நாடாளுமன்றத்தில் முதன்முதலாக ஒலித்தது. மறைந்த நேரு அவர்களால் அதிகம் கையாளப்பட்ட பாடலும் இதுவாகும்.
இந்த பாடலின் அர்த்தம் ..
-----------------------------
இந்துஸ்தான் அல்லது இந்திய நாடு, உலகில் உள்ள மற்ற எல்லா நாடுகளை விட சிறந்தது. அது நாம் வசிக்கும் தோட்டம், நாம் அதில் உள்ள நைட்டிங்கேல் பறவைகள். அந்நிய நாடுகளில் வசித்தாலும் நமது தாய்நாட்டின் நினைவு இதயத்தை வருட்டிக் கொண்டிருக்கும்.
உயர்ந்த, வானாளாவிய மலை தொடர்கள், அவை நமக்கு அரண்களாக மாறின. மனதை மயக்கும் ஆயிரக்கணக்கான ஆறுகள், அவை நாட்டை சொர்க்க பூமியாக மாற்றிவிட்டன. நம் ஒவ்வொருவரிடையே ஏற்படும் பேதங்களை பொறுத்துக் கொள்ள மதங்கள் நமக்கு வழிகாட்டவில்லை.
இந்துஸ்தானில் வாழும் நாம் இந்தியர்கள், இந்துஸ்தானைச் சேர்ந்தவர்கள்.
உலக சாம்ராஜ்ஜியங்களான கிரேக்கம், எகிப்து, ரோம் ஆகியவை அடையாளம் தெரியாமல் மாறி மறைந்தன.
ஆனால், நமது அடையாளங்கள் மட்டும் இன்றும் மாறவேயில்லை. அப்படியே நூற்றாண்டுகள் மாறினாலும், காலங்கள் கைவிட்டாலும் நமது வளர்ச்சி மறையாது ..
இதைவிட என்னடா வேண்டும் தேசபக்திக்கு அளவுகோல் ..?
இதை ஏற்றுக்கொள்ள மறுப்பவன் தேசதுரோகியா ? இந்த வீரமிக்க பாடலை இந்திய பெருமைகளை நெஞ்சுயர்த்தி சொல்லும் இந்த பாடலை நாட்டிற்கு அர்ப்பணித்த சமுதாயம் தேசதுரோக சமுதாயமா..?