சர்வதேச தடையை மீறி மீண்டும் இரு ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு சபை கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகொரியா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த தடைகளை எல்லாம் பொருட்படுத்தாத வடகொரியா அடுத்தடுத்து கண்டம் விட்டு கண்டம் தாண்டி பாய்ந்துச் செல்லும் அணுஆயுத ஏவுகணைகளை சமீபத்தில் பரிசோதித்தது.
இந்நிலையில், நேற்று காலை மேலும் இரு ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வடகொரியாவின் இந்த நடவடிக்கை ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை மீறும் வகையில் அமைந்துள்ளதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளை அனுமதிக்கவும், ஏற்றுக் கொள்ளவும் முடியாது எனவும் ஐ.நா.பாதுகாப்பு சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.