கருத்தரித்த பெண்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக செல்லும் போது அந்தந்த மாதத்திற்கு ஏற்ப டானிக்குகள் மற்றும் மாத்திரைகள் அவர்களுக்கு தரப்படும். வயிற்றில் வளரும் போதே மருந்து, மாத்திரைகளோடு பிறப்பதால் தான் பெரும்பாலான குழந்தைகள் பிறந்த ஒருசில வாரங்களில் உடல்நலம் குன்றி போகின்றன. ஆரோக்கியமான இயற்கை உணவுகளை உண்டு வந்தால் தாயும், கருவில் வளரும் குழந்தையும் முழு உடல்நலத்துடன் இருக்க முடியும். தினமும் காய்கறி கடைவீதியில் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் விலை குறைவான கொத்தமல்லித் தழையை தினமும் உணவில் சேர்த்து வந்தாலே நிறைய ஆரோக்கிய நன்மைகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு கிடைக்கிறது.....
கொத்தமல்லித் தழை, நெய் கொத்தமல்லி கீரையை நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் விலை உயர்ந்த டானிக்கில் கிடைக்கும் சத்துகளை விட அதிக சத்துகளை இதிலிருந்து பெறலாம்.
கொத்தமல்லி கீரையை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகி புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
மேலும் தாது விருத்தியாகி மகப்பேறுக்கு நல்ல வழிவகுக்கிறது கொத்தமல்லித் தழை.
கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் கொத்தமல்லித் தழையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
கர்ப்பிணி பெண்கள் கர்ப்பகாலத்தில் கொத்தமல்லித் தழையை உணவில் சேர்த்து சாப்பிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை ஆரோக்கியமாக வளரும்.
மேலும், கொத்தமல்லித் தழை, குழந்தையின் எலும்புகளும், பற்களும் உறுதியாக இருக்க பயன் தருகிறது.