செவ்வாய், 15 மார்ச், 2016

முன்னாள் அட்மிரல் ஜெனரல் மனம் திறக்கிறார் “இந்து ராஷ்டிரமாக இந்தியா இருக்க முடியாது!”


புதுடில்லி, மார்ச்13_ இந்திய கடற்படையின் தலைமைப்பொறுப்பில் இருந்து பணி ஓய்வு பெற்றவரான லட்சுமிநா ராயணன் ராம்தாசிடம் டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சம்பவங்க ளைக் கண்டித்து ஓய்வு பெற்ற சிப்பாய்கள் ஊர் வலம் செல்வது தொடர் பாகவும்,  தேசியம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.
அவர் கூறியதாவது:
Òகல்வி நிறுவனத்தில் நடைபெறுகின்ற போராட்டங்களை தேசத் துக்கு எதிரானதாகக் கருதி அதன்படி நடத்தப் படக்கூடாது. இந்தியர்கள் அனைவருக்கும் தங்க ளின் கருத்துகளை வெளிப் படுத்துவதற்கும், மாறுபட்ட கருத்து கூறுவதற்கும், எதையும் எதிர்ப்பதற்கும்  உரிமை உண்டு. மாறுபட்ட கருத்துகளை தேசத்துக்கு விரோதமானதாக கருதக் கூடாது.
ஜே.என்.யு. தேசியஅள வில் பெருமதிப்பிற்குரிய நிறுவனமாகும். அந்நிறுவ னத்தில் பயில வருபவர்கள் நாட்டின் பல்வேறு பகுதி களிலிருந்தும் பலதரப் பட்ட குணநலன்களுடன் வந்திருப்பார்கள். நாடு குறித்து சரியான கருத்து எவருக்கேனும் ஏற்பட் டிருந்தால், அது தனி நபரை மட்டும் சார்ந்த பிரச்சினை அல்ல. அவர் வளர்ந்த சமூகத்தின் மனநிலையாகவே அதைப் பார்க்க வேண்டும்.
இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளுமே மூன் றாவது நபரின் தலை யீடுகுறித்து உண்மையான நிலைகளை புரிந்து கொள்ள தவறிவந்துள்ளன. பாகிஸ்தானை எதிரி நாடாக இந்தியா நடத்தக் கூடாது. பாகிஸ்தான் சுதந்திரமடைந்த பல ஆண்டுகளுக்குப் பின்னர் ஜியா உல் ஹக் இசுலா மிய நாடாக அறிவித்த கொள்கையை, பாகிஸ்தானியர்களாக உள்ளவர்களில் பலரும்  ஏற்கவில்லை. அதே போன்றதுதான் ஆர்.எஸ்.எஸ். இந்து ராஷ்டிரமாக இந்தியா இருக்கவேண்டும் என்று கூறிவருவதும் ஆகும்.
ஆர்.எஸ்.எஸ்.சின் கூற்றை இந்தியர்களில் பெரும்பான்மையோர் மறுத்து வந்துள்ளார்கள். இந்தியாவில் வெறுப் புணர்ச்சியை பரப்புவதை விட, அரசமைப்புச் சட்டத்தில் தெளிவாக வரை யறுத்துக் கூறப்பட்டுள்ள முழுமையான மதச்சார் பின்மைக் கொள்கைகளை கடைப் பிடிக்கவேண்டும்’’ என்று அட்மிரல் லட் சுமிநாராயணன் ராம்தாஸ் குறிப்பிட்டார்.
அட்மிரல் லட்சுமி நாராயணன் ராம் தாஸ் கடந்த ஆண்டில் இந்தியாவில் அதி கரித்துவரும் இந்துத்துவ வன்முறைகள்குறித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதி எச்சரித்ததுடன், உடனடியாக தலையிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.