வாஷிங்டன்: இந்திய கடலோர சமவெளியில் குறுகிய தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் வாழிடம் குறித்து ஆராய்ந்த பின் ‘மைக்ரோஹைலா’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மற்றும் தேசிய சிங்கபூர் பல்கலைக்கழகக் குழு இந்த குறுகிய தவளையை கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மற்றும் தேசிய சிங்கபூர் பல்கலைக்கழகக் குழு இந்த குறுகிய தவளையை கண்டறிந்துள்ளனர்.
இந்தியாவின் தென்கிழக்கு கடலோரப் பகுதி அருகே தரிசு நிலங்களில் கிடந்த செங்கற்கள் இடையே அரியவகை தவளை இனம் கண்டறியப்பட்டுள்ளது. மரம், செடிக் கொடி இல்லாமல் தரிசு நிலமாக கருதப்படும் இவ்விடங்களில் செங்கல் உற்பத்தி மட்டுமே செய்யப்படும் என கூறப்படுகிறது.
இதற்கிடையே, ‘மை லடரைட், மை ஹபிடேட்’ என்ற தலைப்பின் கீழ் ஆராய்ச்சி மேற்கொண்ட ராமித் சிங்கல், கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த மணிபால் நகரின் கடலோரப் பகுதியில் இந்த குறுகிய தவளையை கண்டுபிடித்ததாக தெரிவித்துள்ளார்.
சுமார் 1.6 செ.மீ அளவுடைய தவளையின் கை, கால், பக்கவாட்டு பகுதிகளில் கருப்பு கோடுடன் வெளிர் பழுப்பு நிறத்தில் உள்ளது. இதனையடுத்து, தவளையின் இனம் குறித்து ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் அதன் குணாதியசங்களைக் கொண்டு ‘மைக்ரோஹைலா ஒர்நட்டா’ என்ற வகையைச் சார்ந்ததால் ‘மைக்ரோஹைலா’ என பெயரிட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பான ஆராய்ச்சியில் இந்த வகை தவளைகள் அழிந்து வரும் இனத்தைச் சேர்ந்தது எனவும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.