ஞாயிறு, 13 மார்ச், 2016

இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கையின்படி இவ்வாறு செய்வது குற்றமாகும்.

.
கேரளத்தின் இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சகோதரர் E அஹமது அவர்கள் மத்திய அமைச்சராக இருந்த போது, அரசு சார்ந்த ஏதோ ஒரு திறப்புவிழா நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு இருந்தார்.
அவரோடு யேசுதாசும் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் குத்துவிளக்கு ஏற்றி வணங்கி செய்யும் சடங்கை அஹமது அவர்களுக்கு பணித்தார்கள்.
இதற்க்கு பதிலாக E அஹமது அவர்கள், ” இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கையின்படி இவ்வாறு செய்வது குற்றமாகும். ஆகவே நான் விளக்கேற்ற மாட்டேன். உங்களின் நம்பிக்கையின்படி உங்களில் ஒருவர் இதனைச் செய்து கொள்ளுங்கள்.” என்றார்.
உடனேயே……..
யேசுதாஸ் மிகவும் கோபம் கொண்டு அஹமது அவர்களை மேடையிலேயே அசிங்கப் படுத்தி தனது அசிங்கமான மறுபுறத்தை காட்டி
தன்னை ஒரு தேசபக்தன், மற்றும் இந்து மத நம்பிக்கைகளை அப்படியே பின்பற்றுபவன் என்பதுபோல் பேசினார்.

Related Posts: