106 கைதிகள் உள்பட 8.82 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தமிழகம் மற்று புதுச்சேரியில் நாளை தொடங்கும் பிளஸ் டூ தேர்வை 106 சிறைவாசிகள் உள்பட 8,82,044 பேர் எழுதுகின்றனர்.
தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 6550 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளும், 42,347 தனித் தேர்வர்களும் நாளை தொடங்கும் பிளஸ் டூ தேர்வில் பங்கேற்கின்றனர்.
பிளஸ் டூ தேர்வை மாணவர்களைவிட மாணவிகளே அதிக அளவில் எழுதுகின்றனர். 3,91,806 மாணவர்களும், 4,47,891 மாணவிகளும் எழுதுகின்றனர்.
இவர்கள் தவிர பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் ஆகிய மத்திய சிறையில் உள்ள 106 சிறைவாசிகளும் தேர்வெழுதவுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் டிஸ்லெக்சியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு தரை தளங்களிலேயே தேர்வுகூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தேர்வு எழுதுவதற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவசாகம் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டில் முதல் முறையாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
பிளஸ் டூ தேர்வை கண்காணிப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர தேர்வுகூடங்களை கண்காணிப்பாதற்காக 4,000 பறக்கும் படை மற்றும் நிலையான படை அமைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களும் தேர்வுகூடங்களுக்கு அலைபேசியை எடுத்து செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில்
சென்னை மாநகரில் 410 பள்ளிகளிலிருந்து மொத்தம் 51091 மாணவ, மாணவிகள் 145 தேர்வு மையங்களில் தேர்வு எழுதுகின்றனர்.