செவ்வாய், 15 மார்ச், 2016

என்னுடைய நாட்டுப்பற்றை நிருபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை

"பாரத் மாதா கீ ஜே" என்று கூறிதான் என்னுடைய நாட்டுப்பற்றை நிருபிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.‪#‎RSS‬ தலைவர் மோகன் பாகவத்துக்கு AIMIM கட்சியின் தலைவரும், ஐதராபாத் எம்.பியுமான அஸதுத்தீன் உவைஸி பதிலடி கொடுத்துள்ளார்!!
"பாரத் மாதா கி ஜே!" என அனைவரும் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்ற பாகவத்தின் பேச்சுக்கு அஸதுத்தீன் உவைஸி சம்மட்டி அடி கொடுத்துள்ளார், ‪#‎மகாராஷ்டிரா‬ மாநிலம் லத்தூரில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய அவர், நான் "பாரத் மாதா கி ஜே" எனக்கூற மாட்டேன், பாகவத், இனி நீங்கள் என்னசெய்யப்போகிறீர்கள்? எனது கழுத்தில் கத்தியை வைத்து சொல்லச்சொன்னாலும், நான் அவ்வாறு கூற மாட்டேன்! "பாரத் மாதா கி ஜே" என கூற வேண்டும் என அரசியல் சாசனத்தில் கூறப்படவில்லை, நான் தொடர்ந்து இஷ்ரத் ஜகான் குடும்பத்தினருக்கு ஆதரவு அளிப்பேன் எனக்கூறினார்.
அஸதுத்தீன் உவைஸி கூறுகையில், நான் எனது கருத்தில் உறுதியாக உள்ளேன். இதில் எந்த சட்டத்தையும் விதியையும் மீறவில்லை. பயமுறுத்துவதற்கு பாகவத் யார்? தங்களது கொள்கையை மற்றவர்கள் மீது திணிக்கக்கூடாது எனக்கூறினார்.
தனியார் டிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் அஸதுத்தீன் உவைஸி கூறியதாவது: இந்த கோஷத்தை கூறித்தான் எனது நாட்டுபற்றை நிருபிக்க வேண்டும் என யாரும் என்னை கட்டாயப்படுத்தக்கூடாது. ஒரு கோஷம் மட்டும் நாட்டுப்பற்றின் அளவுகோளாக இருக்க முடியாது. இந்த கோஷத்தை யார் எழுப்பினாலும், அதில் எனக்கு பிரச்னையில்லை. ஆனால் எனது நாட்டுப்பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது.
‪#‎mannadykaka‬
இவ்வாறு கோஷம் எழுப்ப சட்டத்தில் எந்த விதியும் உள்ளதா? ஒருவரின் நாட்டுப்பற்று பற்றி கேள்வி கேட்க ஆர்.எஸ்.எஸ்., யார்? அந்த அமைப்பிற்கு யார் அதிகாரம் கொடுத்தது? இந்த கோஷத்தை எழுப்பாத பல முஸ்லிமகள் இந்திய ராணுவத்தில் உள்ளனர். நாட்டை விரும்புகிற உங்களது விருப்பம் எனது பார்வையில் வேறு! நான் இந்துஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷத்தை கூறியுள்ளேன்! பாகவத்திற்கு பதிலளிக்க இதனை கூறுகிறேன் என்றார். - அமீன்
உண்மையை தயங்காமல் பயப்படாமல் உரக்க பட்டவர்த்தனமாக எடுத்துரைத்த ‪#‎உவைசி‬ அவர்களுக்கு இறைவன் வெற்றியை கொடுப்பானாக!!
#MANNADYKAKA