செவ்வாய், 8 மார்ச், 2016

#‎KanhaiyaKumar‬ கம்யூனிஸ்ட் கட்சியின் வார்ப்பு.

 
இரண்டு படங்கள் இருக்கிறதா?
ஒரு படத்தில் இருப்பவை - பழைய அலமாரி ஒன்று, ஒரு டிராவல் பேக், கொஞ்சம் பழைய போர்வைகள், மிகச்சில துணிகள்.
இவை யாருடையவை என்று தெரியுமா?
1925இல் பிறந்து, 16 வயதில் அரசியலில் நுழைந்து, விடுதலைப்போரில் பங்கேற்று பலமுறை சிறை சென்று, மாணவர் தலைவராகவும், மகாராஷ்டிர சட்டமன்ற உறுப்பினராகவும், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் பல்லாண்டுகள் பல பொறுப்புகளில் பணியாற்றி கடந்த ஜனவரியில் மறைந்தாரே ஏ.பி. பரதன்.... அவர் மறைந்தபோது அவருடைய சொத்துகள்தான் இவை. (தமிழ்நாட்டில் காமராஜரின் சொத்துகள் நினைவு வரக்கூடும்.)
இன்னொரு படத்தில் இருப்பவர்கள் யார் என்று தெரியுமா?
அந்த ஏ.பி. பரதனிடம் பரிசு பெறுகிறான் எளிய ஆடையில் இருக்கும் ஒரு பள்ளி மாணவன்.
அவன்தான் ஜேஎன்யு மாணவர் தலைவன் ‪#‎KanhaiyaKumar‬ அன்றிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் வார்ப்பு. ஏதோ நேற்று அரசியலுக்கு வந்தவன் அல்ல.
எவனோ கொடுத்த காசில் பத்து லட்ச ரூபாய் கோட்டு மாட்டிக்கொண்டு வெட்கமின்றி உலவியவர்களும், விடுதலைப்போராட்டத்தின்போது ஆங்கிலேயர்களுக்கு காவடி தூக்கிவிட்டு இப்போது தேசபக்த வேஷம் போடுகிறவர்களும் இதே நாட்டில்தான் இருக்கிறார்கள் என்பது உங்களுக்கு நினைவு வரக்கூடும்
- ஷாஜஹான் (டெல்லி)

Related Posts: