சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூர் அருகே காஷ்னா கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் தேவாலயத்தில் புகுந்த 15 பேர் கொண்ட கும்பல், தேவாலயத்தை அடித்து நொறுக்கியதுடன் அங்கிருந்தப் பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தினர்.
இதில் 6 பேர் படுகாயம் அடைந்தனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 5 வாரங்களில் நடந்த 4 வது தாக்குதல் இதுவாகும்.போலீசார் நடத்திய விசாரணையில், பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. இதுதொடர்பாக 9 பேரை கைது செய்து போலீசார், 3 இருசக்கர வாகனங்களையும் பறி முதல் செய்தனர்.